Published:Updated:

`ஊதியமும் வரவில்லை, ஓய்வு பெற்றவர்களுக்கு சேமநல நிதியும் வரவில்லை!' - சர்க்கரை ஆலை ஊழியர்கள் வேதனை

2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ரூ.56 கோடி நிதியில் ஆலையை மறுசீரமைப்பு நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால், அந்த நிதி இதுவரை பயன்படுத்தப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலை 1987-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலையில் அப்போது சுமார் 700 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். மயிலாடுதுறை தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 23,000 விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக உள்ளனர்.

அரசு ஆலை
அரசு ஆலை
10 ஏக்கரில் 700 டன் கரும்பு மகசூல் எடுத்த அதிமுக முன்னாள் எம்.பி; பாராட்டிய சர்க்கரை ஆலை நிர்வாகம்!

இந்த ஆலை ஒரு டன் கரும்புக்கு 97,000 கிலோ அரவை உற்பத்தி தந்து வந்தது. 1993-ம் ஆண்டு இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ. 25,000 கோடி லாபத்தில் இயங்கி வந்தது. இந்திய அளவில் சிறந்த ஆலை என்று விருதும் பெற்றுள்ளது. 1994-ம் ஆண்டு ஆலை விரிவாக்கப் பணி செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் செய்யப்படவில்லை.

இதனால் ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவைத் தந்தது. இதனால் ஆலை நஷ்டத்தில் இயங்கியது. இதனால் ஆலையின் அரவை குறைந்தது. 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ரூ.56 கோடி நிதியில் ஆலையை மறுசீரமைப்பு நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால், அந்த நிதி இதுவரை பயன்படுத்தப்படவில்லை.

இதுபற்றி கொள்ளிடத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவரான ஜலபதியிடம் பேசினோம். `` 2017-ம் ஆண்டு தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி மூடப்பட்டது. சர்க்கரை ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். தொடர்ந்து சர்க்கரை ஆலை நிறுத்தப்பட்டது.

ஜலபதி
ஜலபதி

மேலும் ஆலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சேமநலநிதி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, ஆலையை மீண்டும் செயல்படுத்தவும் வேலை இழந்துள்ள ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப் பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு