Published:Updated:

மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கிய நூலகர்!

திருமண மொய்ப்பணம்

மயிலாடுதுறை: மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கிய நூலகர். ஊர்மக்கள் பாராட்டு!

மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கிய நூலகர்!

மயிலாடுதுறை: மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கிய நூலகர். ஊர்மக்கள் பாராட்டு!

Published:Updated:
திருமண மொய்ப்பணம்
மயிலாடுதுறையில் மகனின் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகத்துக்கு வழங்கிய ஓய்வுபெற்ற நூலகரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர் ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரின் மகன் சம்பத்குமாருக்கும் காந்திமதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண அழைப்பிதழிலேயே, அன்பளிப்பைத் தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்திட வேண்டுமென ஜெயக்குமார் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அதையும் மீறி அன்பின் காரணமாக மொய் அளித்தவர்களை தடுக்க முடியவில்லை. இதனால் அவர், திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து, மொய்ப் பணத்தை அதில் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அந்த வகையில் வசூலான ரூ.83,000 ரொக்கப்பணத்துடன், மேலும் ரூ.17,000 சேர்த்து ஒரு லட்ச ரூபாயை மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் வயதான ஏழை மக்கள் ஆகியோருக்குப் பிரித்து வழங்கினார்.

திருமண   மொய்ப்பணம் வழங்கல்
திருமண மொய்ப்பணம் வழங்கல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபற்றிப் பேசிய ஜெயக்குமார், "அன்பளிப்பைத் தவிர்க்கவும். அதனை ஏழை எளியவருக்கு உதவி செய்யவும் என்று அழைப்பிதழில் கேட்டுக்கொண்டும், அதையும் மீறி மணமக்களுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் மனம் நோகவேண்டாம் என்பதற்காக ஒரு பெட்டியைத் தயார் செய்து வைத்தோம். அதில் போடப்பட்ட பணத்துடன் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து குழந்தை நலக்காப்பகம், முதியோர் காப்பகம், மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மற்றும் ஏழைகளுக்குப் பிரித்து வழங்கினோம். இதனைப்  பெண் வீட்டாரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு மிக்க மனநிறைவைத் தருகிறது. இதுபோல் மற்றவர்களும் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

மகனின் திருமணத்துக்குப் பெண் வீட்டாரிடமும் வரதட்சிணை பெற்றுக்கொள்ளாத நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், மொய்ப் பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயல் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.