Published:Updated:

மயிலாடுதுறை: சொந்த செலவில் வாகனத்தில் ஸ்மார்ட் டிவி... வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்மார்ட் டிவி ஒளிபரப்பில் கல்வி
ஸ்மார்ட் டிவி ஒளிபரப்பில் கல்வி

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதித்துவிடக்கூடாது என்பதற்காக சொந்த செலவில் ஸ்மார்ட் டிவி வைத்து ஊர் ஊராகச் சென்று பாடம் நடத்திவரும் ஆசிரியரைப் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் முறையாகச் செயல்பட முடியாமல் போயின. இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் பக்கமே செல்லாத மாணவர்களாகத்தான் பலரும் உள்ளனர். குறிப்பாக, ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி இதனால் பெரியளவில் பாதிக்கபட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் மூலமாகத் தொடர்ந்து பாடம் எடுத்து வருகின்றன.

ஸ்மார்ட் டிவி ஒளிபரப்பில் கல்வி
ஸ்மார்ட் டிவி ஒளிபரப்பில் கல்வி

ஆனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளன. இருந்தபோதிலும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசுக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் பாடம் வாரியாக தேதி, நேரம் ஒதுக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகிறார்கள்.

மாணவர்களுக்கு இவ்வாறு பாடங்கள் நடத்தப்பட்டாலும், பல வீடுகளில் ஏழ்மையின் காரணமாக டிவி இல்லாத நிலை இருக்கிறது. ஸ்மார்ட்போன் வசதியும், இணைய வசதியும்கூட கிடையாது. பெற்றோர்களும் விவசாயப் பணிகளுக்கு, கூலி வேலைகளுக்குச் சென்றுவிடுவதால் மாணவர்களின் கல்வி அங்கே பாதிக்கப்படுகிறது.

இதனைப் போக்க மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - சட்டநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் சீனிவாசன் என்பவர் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார். இவர் சீர்காழியை அடுத்த நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக தனது சொந்த செலவில் நடமாடும் ஸ்மார்ட் டிவி மூலம் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை நடத்திவருகிறார்.

ஸ்மார்ட் டிவி ஒளிபரப்பில் கல்வி
ஸ்மார்ட் டிவி ஒளிபரப்பில் கல்வி

இதற்காக ஆசிரியர் சீனிவாசன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்றையும், அதனுடன் ஸ்பீக்கர், இணையவசதி, மோடம், பென்டிரைவ் ஆகியவற்றையும் தனது சொந்த செலவில் வாங்கியுள்ளார். மூன்று சக்கர சைக்கிளில் இவற்றைப் பொருத்தி கிராமத்திற்கு எடுத்துச் சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் மாணவர்களை ஒன்றிணைத்து டிவியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பாடம் எடுத்துவருகிறார். அதில் ஏற்படும் சந்தேகங்களை நேரடியாகத் தீர்த்துவைத்தும் வருகிறார்.

சைனிக் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விருப்பமா? நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இது குறித்து ஆசிரியர் சீனிவாசனிடம் பேசினோம்..

"அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நேரடித் தொடர்பில்லாத நிலை உள்ளது. எனவே, கல்வித் தொலைக்காட்சியை அனைத்து மாணவர்களும் அவசியம் பார்க்க வைக்க வேண்டும், அதிலுள்ள பாடம் சார்ந்த சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், நானும் சக ஆசிரியர்களும் சேர்ந்து இதனைச் செய்து வருகிறோம்" என்றார்.

ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு