Published:Updated:

`பாரம்பர்ய உணவு முறையை மீட்கும் முயற்சிதான் இது!' - நெடுஞ்சாலையில் ஆரோக்கிய உணவகம் அமைத்த பட்டதாரி

ஆரோக்கிய உணவகம்

``முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, பிரண்டை தோசை, மணத்தக்காளி தோசை, தூதுவளை தோசைன்னு ஐந்து வகையான மூலிகை தோசைகள் எங்க ஹோட்டல்ல `Must Try' உணவுகள். எங்க கடை தந்தூரி டீயும் இதே ரகம்தான்."

`பாரம்பர்ய உணவு முறையை மீட்கும் முயற்சிதான் இது!' - நெடுஞ்சாலையில் ஆரோக்கிய உணவகம் அமைத்த பட்டதாரி

``முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, பிரண்டை தோசை, மணத்தக்காளி தோசை, தூதுவளை தோசைன்னு ஐந்து வகையான மூலிகை தோசைகள் எங்க ஹோட்டல்ல `Must Try' உணவுகள். எங்க கடை தந்தூரி டீயும் இதே ரகம்தான்."

Published:Updated:
ஆரோக்கிய உணவகம்

தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் சவுலூரை அடுத்து காணப்படுகிறது `NH44 ஆர்கானிக் ஷாப்'. பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆர்வமாகி உள்ளே சென்றால், கடையும் முழுக்க முழுக்க வித்தியாசமாகத்தான் இருந்தது. கடையின் உரிமையாளரும் எம்.பி.ஏ பட்டதாரியுமான சதீஷ் பெருமாள், இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்தக் கடையை நடத்தி வருகிறார்.

கடை உரிமையாளர் சதீஷ் பெருமாள்
கடை உரிமையாளர் சதீஷ் பெருமாள்

ஆரம்பத்தில் டீக்கடை நடத்தி வந்த சதீஷ் பெருமாள் உணவு பற்றிய சிந்தனையையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து தன் டீக்கடையை ஆர்கானிக் ஹோட்டலாகவும், ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்யும் கடையாகவும் மாற்றி மக்களையும் இளைஞர்களையும் ஈர்த்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நேஷனல் ஹைவேஸ் 44-ல கடை இருக்கிறதாலே... அதையே கடைக்கும் பேரா வெச்சிட்டேன். மனுஷன் உயிர் வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு ரொம்ப அவசியம். நம்ம பாரம்பர்ய உணவான சிறுதானியங்கள்தான் ஊட்டச்சத்துகளை அதிகம் தரும் உணவுன்னு உணவியல் வல்லுநர்கள் சொல்றாங்க.

கடைக்குப் பின்பக்கத்திலிருக்கும் தோட்டம்
கடைக்குப் பின்பக்கத்திலிருக்கும் தோட்டம்

முன்னோர்களின் உணவில் சிறுதானியங்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அந்தந்த நிலம் சார்ந்தே முன்னோர்களின் உணவு முறையும் இருந்தது. நம் முன்னோர்களோட பாரம்பர்ய உணவு முறையை மீட்டெடுக்கும் முயற்சியாதான் இந்தக் கடையைத் தொடங்குனேன்" என்பவர் கடைக்குத் தேவையான கீரை வகைகளையும் மூலிகைகளையும் கடையின் பின்னால் 5 சென்ட் பரப்பளவில் இருக்கும் வீட்டுத்தோட்டத்தில் சாகுபடி செய்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சைனா வல்லாரை, யானை வல்லாரை, நாட்டு வல்லாரைனு மூணு வகை வல்லாரைக் கீரையைத் தோட்டத்துல பயிரிட்டிருக்கேன். அதேபோல மஞ்சள், சிவப்புனு ரெண்டு வகை பொன்னாங்கண்ணி கீரையும் பயிரிட்டிருக்கேன். அழிந்து வரும் நிலையில இருக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி போன்ற அரிய கீரை வகைகளையும் இங்கே பயிரிடப்பட்டிருக்கு.

பணியாரம்
பணியாரம்

வெளி மார்க்கெட்ல கீரைகளை வாங்க மாட்டோம். நாங்களே வளர்த்து அதை உணவில் பயன்படுத்தி மக்கள்கிட்ட கொண்டு சேர்க்குறோம்" என்றவர், கடையின் முன்பக்கத்துக்கு அழைத்துச் சென்றார். முன்பக்கத்தில் `வெர்ட்டிகிள் கார்டன்' மூலம் அனைத்து மூலிகைச் செடிகளையும், அலங்காரச் செடிகளையும் ஒரே இடத்தில் வளர்த்து வருகிறார்.

மின்ட் துளசி, சீனித்துளசி, கற்றாழை, சிறியாநங்கை போன்ற மூலிகைகளை ஒரே பைப்பில் துளையிட்டு நீர் ஊற்றி வளர்க்கும் `பைபாஸ்' முறையில் வளர்த்து வருகிறார். ``எங்க ஹோட்டல் தோசை, தினை மாவு அல்லது பாரம்பர்ய மாப்பிள்ளை சம்பா அரிசி மூலம் தயாரிக்கப்படுது.

பனம்பழச்சாறு
பனம்பழச்சாறு

முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, பிரண்டை தோசை, மணத்தக்காளி தோசை, தூதுவளை தோசைன்னு ஐந்து வகையான மூலிகை தோசைகள் எங்க ஹோட்டல்ல `Must Try' உணவுகள். எங்க கடை தந்தூரி டீயும் இதே ரகம்தான். அதிமதுரம், அஸ்வகந்தா சீந்தில், திப்பிலி, ஆடாதொடை, துளசி, ஆவாரம் பூ, தூதுவளை, பட்டை, இலவங்கப் பூ, ஏலக்காய், கருஞ்சீரகம், சுக்கு, கடுக்காய்னு மொத்தம் 14 மூலிகைகள் சேர்ந்த தந்தூரி டீ சாப்பிட்டா உடலும் மனசும் புத்துணர்ச்சி ஆயிடும். ஜீரணத்துக்கும் உதவும். இந்த டீக்கு ஃபயர் டீ என்ற பேரும் உண்டு.

இந்த ஸ்பெஷல் டீயை வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே தயாரிச்சு சாப்பிடுறதுக்காக தந்தூரி டீத்தூளையும் விற்பனைக்கு வெச்சிருக்கோம்" என்கிறார். ஹோட்டலில் பிற உணவுகளும் கிடைக்கும் என்றாலும் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கேற்ப மூலிகை சேர்த்த உணவுகள் தயார்செய்து கொடுக்கப் படுகின்றன.

இவை தவிர, நீரா பானம், பனம்பழச்சாறு, காடை முட்டையில் தயார் செய்யப்படும் பிஸ்கெட், நன்னாரி சர்பத், ரோஜா சர்பத், வெட்டிவேர் சர்பத் என இந்தக் கடைகளில் கிடைக்கும் ஆரோக்கிய உணவுகளின் பட்டியல், நெடுஞ்சாலை போலவே நீண்டு கொண்டே செல்கிறது.

தந்தூரி டீ
தந்தூரி டீ

``ஆரோக்கியம் இல்லாத கலப்பட மசாலாப் பொடிகளை வைத்து பல ஹோட்டல்கள்ல உணவு தயாரிக்கிறாங்க. ஆரோக்கியமான உணவைக் கொடுக்கிறது மூலமாவும், இயற்கை சார்ந்த பொருள்களை விற்பனை செய்யுறதாலயும் மக்களை ஆரோக்கியத்தின் பக்கம் திருப்ப முடியும்னு நம்புறேன். இந்தக் கடையைத் தொடங்கினதுக்கான முக்கியமான காரணமும் இதுதான். இந்தத் தொழில்ல பெரிய அளவு லாபம் கிடைக்கலன்னாலும் மக்களுக்கு நல்லதைக் கொடுக்கிறோம்கிற மனநிறைவு கிடைக்குது. அதுவே போதும்" - மனம் நிறைந்து பேசுகிறார் சதீஷ் பெருமாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism