Published:Updated:

`சான்றிதழில் சாதி இல்லை என்பதால் சாதி ஒழிந்துவிடாதுதான்; ஆனால்...' - கோவை குழந்தையின் பெற்றோர்

நரேஷ் கார்த்தி, வில்மா, காயத்திரி

``கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்று 1972 அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் என யாரிடமும் விழிப்புணர்வு இல்லை.’’ - நரேஷ் கார்த்திக்

`சான்றிதழில் சாதி இல்லை என்பதால் சாதி ஒழிந்துவிடாதுதான்; ஆனால்...' - கோவை குழந்தையின் பெற்றோர்

``கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்று 1972 அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் என யாரிடமும் விழிப்புணர்வு இல்லை.’’ - நரேஷ் கார்த்திக்

Published:Updated:
நரேஷ் கார்த்தி, வில்மா, காயத்திரி

கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். தொழிலதிபரான இவர் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி காயத்திரி தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்.

கோவை
கோவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தம்பதிக்கு மூன்றரை வயதில் வில்மா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் இருக்கும் தம்பதி, `வில்மா, சாதி மதம் சாராதவர்’ என்ற சான்றிதழை வருவாய்த்துறையில் வாங்கியுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நரேஷ் கார்த்திக் கூறுகையில், ``சாதி இல்லாத சமுதாயம் வேண்டும் என்பதை நான் மட்டும் சொல்லவில்லை. சாதியை ஒழிக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பள்ளிகளில்தான் முதலில் சாதி குறித்துக் கேட்கப்படுகிறது. அதை மாற்றினால் சாதி ஒழிந்துவிடாதுதான்.

சான்றிதழ்
சான்றிதழ்

என்றாலும், சாதி இல்லாத சமுதாயத்துக்கான முதல் படியாக, எங்கள் முயற்சியைப் பார்க்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடஒதுக்கீடு மிகவும் முக்கியம். அதைக் கூடாது என்று சொல்லும் ஆள் நான் இல்லை. இட ஒதுக்கீடு இருப்பதால்தான், ஒடுக்கப்பட்ட மக்கள் பலர் மேலே வருகின்றனர். சலுகைகள் இருப்பதால்தான் தங்கள் குழந்தைகளைப் படிக்கவே அனுப்புகின்றனர். அது இல்லாவிடின் அந்த மக்கள் பள்ளிக்குச் செல்வதே சிரமமாகிவிடும்.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

பாரதியார், காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது கோடிக்கணக்கான மக்களின் கனவு. பிறப்பால் ஏற்றத் தாழ்வு சொல்வதில், எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

அடிப்படை அறிவு, பகுத்தறிவு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்குள், எங்கள் குழந்தை, சாதி மத அடையாளத்துடன் செல்ல வேண்டாம் என்று நினைத்தோம். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நான் மட்டும் தனித்து இந்த முடிவை எடுக்கவில்லை. நான், என் மனைவி இருவரும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

சாதி
சாதி

சிலர் நானும், என் மனைவியும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அதனால்தான் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் எடுத்திருப்பார்கள் என்றுகூட கூறலாம். பிறப்பால் எந்த மதம் ஒட்டப்பட்டதோ, இருவரும் ஒரே மதத்தில் வளர்ந்தவர்கள்தான்.

எங்களுக்கு மதக் கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. அவ்வளவுதான். திருக்குறள், அம்பேத்கர், பாரதியார் கோட்பாடுகளை எடுத்து வளர்ந்தவன் நான். கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்று 1972 அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கல்வி
கல்வி

ஆனால், அது குறித்து அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் என யாரிடமும் விழிப்புணர்வு இல்லை. என் மகளை ஒரு பள்ளியில்தான் சேர்க்க முடியும் என்றாலும், பள்ளிகளின் இந்தப் பார்வை குறித்து தெரிந்துகொள்ள நிறைய பள்ளிகளில் விண்ணப்பம் வாங்கினோம். அங்கெல்லாம் `சாதி இல்லை’ என்று ஒரு பிரிவே இல்லை என்றனர்.

`1,500 குழந்தைகள் படிக்கும் இடத்தில், உங்கள் ஒரு குழந்தைக்காகத் தனியாகச் செயல்பட முடியுமா?’ என்று கேட்கின்றனர். கல்வி நிறுவனங்களில் விண்ணப்பம் உள்ளிட்ட சான்றிதழ்களில் `சாதி இல்லை’ என்கிற பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறேன்.

ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் மனு

அவர் அரசுக்கு பரிந்துரை செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், 1972 அரசாணையை மீண்டும் சுற்றறிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism