Published:Updated:

குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, கம்மர்கட்; 90's கிட்ஸ் மிட்டாய் கடை மூலம் அசத்தும் ஊட்டி இளைஞர்!

90's கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை
90's கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை

`90's கிட்ஸ்' என்ற பெயரில் மிட்டாய் கடை ஒன்றை துவக்கி, 90'ஸ் காலகட்டத்தில் மிக பிரபலமாக இருந்த 300-க்கும் அதிகமான மிட்டாய் மற்றும் விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்து அசத்தி வருகிறார் ஊட்டி இளைஞர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேந்த இளைஞர் அருண்குமார். 9-ம் வகுப்புவரை படித்துள்ள இவர், வெல்டிங் வேலை செய்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர், சுயமாக ஒரு தொழில் துவங்க முடிவு செய்து, ஊட்டி நகரின் மையப்பகுதியில் சிறிய கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, மிட்டாய் கடை ஒன்றை தொடங்கியுள்ளார். `90's Kids' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்தச் சிறிய மிட்டாய் கடையில், 90'ஸ் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த மிட்டாய் வகைகள் மற்றும் விளையாட்டு பொருள்கள் என 300-க்கும் அதிகமான அயிட்டங்களை குவித்து வைத்துள்ளார்.

90's கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை
90's கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை
``பெட்டிக்கடையா ஆரம்பிச்சது; இப்போ 7 கிளைகளா விரிஞ்சிருக்கு!" - அறந்தாங்கி சுந்தரம் பேக்கரியின் கதை

எளிதில் கிடைக்காத இந்த வகை மிட்டாய்களை ஊட்டி மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதோடு சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். ஒரே வாரத்தில் ஃபேமஸ் ஆன அருண்குமார் தற்போது மற்ற கடைகளுக்கு ஹோல்சேல் சப்ளையிலும் படு பிஸியாக உள்ளார்.

ஊட்டி கமர்ஷியல் சாலையோரத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடிப்படி சந்தில் நம்பிக்கையுடன் கடைவிரித்து ஓனராக அமர்ந்திருந்த அருண்குமாரை சந்தித்துப் பேசினோம். ``லாக்டௌன்ல வேலை இல்லாம இருந்தேன். சும்மா சோஷியல் மீடியால பாத்தப்போ, 90'ஸ் கிட்ஸ் மிட்டாய்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறது தெரிஞ்சது. எங்க மாவட்டத்துல அந்த மாதிரி கடை எதுவும் இல்ல. சரி நாம ஆரம்பிச்சா என்னனு இதை ஸ்டார்ட் பண்ணினேன்.

சென்னை, மதுரை, கோவில்பட்டினு 8 இடங்களுக்கு நேர்ல போயி, டீலருங்கள பிடிச்சி, ஜவ்வு மிட்டாய், கயிறு மிட்டாய், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, பென்சில் மிட்டாய், கம்மர்கட்னு இது மாதிரி அந்தக்கால மிட்டாய் அயிட்டங்களை தேடிப்பிச்சி கொண்டுவந்தேன். அது மட்டும் இல்லாம கோலிகுண்டு, பம்பரம், காத்தாடி, டிக் டிக், விசில்னு இந்த மாதிரி பழைய விளையாட்டுப் பொருள்களையும் கொண்டுவந்தேன்.

90's கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை
90's கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை
``அப்போ வண்டியைத் தொட்டுப் பார்க்கக்கூட முடியல; இப்போ..! - தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர்

இப்போதைக்கு நம்ம கடைல மொத்தம் 300 அயிட்டம் இருக்கு. இன்னும் 150 அயிட்டங்களை தேடிட்டு இருக்கேன். சீக்கிரம் கிடைச்சிரும். இந்தப் பொருள்களோட விலை ஒரு ரூபாய்ல இருந்து 10-15 ரூபாய் வரைதான். மக்கள்கிட்ட நல்ல ஆதரவு இருக்கு. ஃபேமிலியோட வந்து ஆச்சர்யமா பார்த்து, வாங்கிக்கிட்டு போறாங்க. மத்த கடைகள்ல இருந்தும் ஆர்டர் குவியுது. சரக்க குடுக்க முடியாம திணற அடிக்கிறாங்க. என் மனைவி சப்போர்ட்டும் இதுக்கு முக்கியக் காரணம். எவ்வளவு லாபம் கிடைச்சாலும் பீடி, சிகரெட் அயிட்டங்களை விற்க மாட்டேன்னு உறுதியா இருக்கேன்" என்றார் நம்பிக்கையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு