Published:Updated:

வேளாண் ஆராய்ச்சி உயர்படிப்பு நுழைவுத் தேர்வு; சாதித்த வனக்கல்லூரி மாணவிகள்!

இந்த ஆண்டு முடிந்த தேர்வுகளில், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் இளங்கலை வனவியல் மாணவர்கள் ஒன்பது பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் மாணவி அர்ஷா ரியாஸ் இரண்டாவது இடத்தையும், மற்றொரு மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்று சாதித்துள்ளனர்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), ஒவ்வோர் ஆண்டும் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை (AIEE) நடத்துகிறது.

நுழைவுத் தேர்வு | Entrance Exams
நுழைவுத் தேர்வு | Entrance Exams
மாணவர்கள் விரும்பும் ஆன்லைன் தேர்வு; அரசு அறிவித்திருக்கும் நேரடி தேர்வு; முடிவுதான் என்ன?

அதன்படி இந்த ஆண்டு முடிந்த தேர்வுகளில், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் இளங்கலை வனவியல் மாணவர்கள் ஒன்பது பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக, அகில இந்திய அளவில் மாணவி அர்ஷா ரியாஸ் இரண்டாவது இடத்தையும், மற்றொரு மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்று சாதித்துள்ளனர். இதுகுறித்து மாணவி ரத்னா கூறுகையில், ``மேட்டுப்பாளையம்தான் எங்கள் பூர்விகம். நான் சற்று தாமதமாகத்தான் தேர்வுக்குத் தயாரானேன். இளங்கலையில் படித்த, நமது அறிவைதான் தேர்வில் சோதனை செய்வார்கள்.

ரத்னா
ரத்னா

என் தோழி ரியாஸ் மூலமாகதான் எனக்கு இந்தத் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு வந்தது. அடுத்தகட்டமாக ஆன்லைன் மூலமாக கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, விருப்பப்பட்ட கல்லூரியை தேர்வு செய்வேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன் கூறுகையில், ``உயர்படிப்புகள், மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுக்கான சிறப்பு பாடத்திட்டம் மாணவர்களுக்கு எங்கள் கல்லூரியில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதற்கென்று கேள்விகள் அடங்கிய சிறப்பு புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது.

அர்ஷா ரியாஸ்
அர்ஷா ரியாஸ்

கொரோனா காலகட்டத்தில் கிட்டத்தட்ட 45 நாள்களுக்கு இந்த வகுப்பை எடுத்துள்ளோம். தேர்ச்சியான மாணவர்கள் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உள்ளோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு