Published:Updated:

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: ஊட்டியில் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட அதிமுக-வினர்!

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

ஊட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டது மக்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: ஊட்டியில் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட அதிமுக-வினர்!

ஊட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டது மக்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

குறைவான மக்கள் அடர்த்தியைக் கொண்டிருக்கும் மாவட்டம் என்றாலும் மலை பிரதேசம் என்பதால் நீலகிரியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நீலகிரியிலும் தற்போது கொரோனா தொற்று பரவல் வேகம் பல மடங்கு உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 250-க்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

இது தவிர, மாவட்டத்தில் இருக்கும் தனியார் கினினிக்குகளில் சளி, காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது மேலும் அதிகரிக்கும் என சுகாதரத்துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இதனால்,கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டது மக்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் கொண்டாட்டம் ஊட்டியில் நடத்த அந்தக் கட்சியினரால் திட்டமிடப்பட்டது. மாவட்டச் செயலாளர் வினோத் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் வருகைக்காக, கட்சியின் மகளிரணியினர் மற்றும் தொண்டர்கள் பலர் காலை 10 மணி முதல் மதியம் 2.30 வரை ஊட்டியில் கூட்டமாக காத்துக் கிடந்தனர். மாவட்டச் செயலாளர், கூடலூர் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ சாந்திராமு, முன்னாள் எம்.பி அர்ஜுனன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஒருவர் பின் ஒருவராக எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நெரிசலான இடத்தில கூட்டமாக பலர் கூடியும், ஒருவர் கூட முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்ததும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத நிர்வாகிகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டதோடு, கூட்ட நெரிசலில் நின்று உறுதிமொழி ஏற்றும், கோஷம் எழுப்பியும் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டனர். மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே கொரோனா விதிமுறிகளை அலட்சியப்படுத்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு விதிமுறை மீறல் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ``கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் விதி மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism