Published:Updated:

முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் - நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்! | Live Updates

பிபின் ராவத்
Live Update
பிபின் ராவத்

முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

08 Dec 2021 7 PM

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்ததை உறுதிசெய்தது அரசு; அவர் குறித்த விரிவான தகவல்கள்..!

08 Dec 2021 6 PM

பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் பலி!

விமானப்படை ட்வீட்
விமானப்படை ட்வீட்

குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
08 Dec 2021 5 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ``இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாக, பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் உட்பட நமது ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் பணியாற்றினார் ஜெனரல் ராவத். அவரின் சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது. ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்காற்றினார். அவரின் மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ட்வீட்
ட்வீட்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ``ஜெனரல் பிபின் ராவத், அவர் மனைவி ஆகியோரின் மரணம் என்னை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியிருக்கிறது. தேசம் தன் துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டுக்கான அவரின் தன்னலமற்ற சேவை, வீரம் ஆகியவை வரலாற்றில் குறிக்கப்பட்டவை. அவர் குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

ட்வீட்
ட்வீட்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த தினம் நம் தேசத்துக்கு ஒரு துன்பகரமான நாள். தாய்நாட்டுக்கு மிகுந்த பக்தியுடன் சேவையாற்றிய துணிச்சல்மிக்க வீரர்களில் பிபின் ராவத்தும் ஒருவர். தேசத்துக்கு அவரின் முன்மாதிரியான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்

ட்வீட்
ட்வீட்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களில் 12  பேர் பலி - நீலகிரி ஆட்சியர் தகவல்!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில், 13 பேர் உயிரிழந்துவிட்டதாக சிறிது நேரத்துக்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்திய விமானப்படை தரப்பிலோ, மத்திய அரசின் தரப்பிலோ உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வத் தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

விபத்து
விபத்து

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் ஐ.ஏ.எஸ்., விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறார். விபத்தில் சிக்கிய 14 பேரில் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகத் அவர் தெரிவித்திருக்கிறார்.

08 Dec 2021 4 PM

ராஜ்நாத் சிங்குடன் ராணுவத் தளபதி சந்திப்பு!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 14 பேரில், மீட்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மற்றவர்களின் நிலை குறித்த தகவல்கள் தெரியவில்லை. இந்த நிலையில், டெல்லியில் முப்படைத் தளபதியின் இல்லத்துக்குச் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத்தின் மகளைச் சந்தித்துப் பேசினார்.

மனோஜ் முகுந்த் நரவானே
மனோஜ் முகுந்த் நரவானே

அவரைத் தொடர்ந்து, ராணுவத் தளபதி நரவானேவும் டெல்லிக்கு விரைந்திருக்கிறார். பிபின் ராவத்தின் இல்லத்தில் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

08 Dec 2021 4 PM

எரிந்தபடியே வெளியில் வந்தனர் - ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவர் கூறும் தகவல்!

08 Dec 2021 3 PM

பிபின் ராவத் இல்லத்தில் ராஜ்நாத் சிங்; குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்!

நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நிகழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை தற்போது 9-ஆக அதிகரித்திருக்கிறது. முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி ஆகியோரின் நிலை குறித்த எந்தவிதத் தகவலும் இதுவரையில் வெளியாகாத நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத்தின் இல்லத்துக்குச் சென்று, அவர் மகளுடன் பேசினார்.

08 Dec 2021 3 PM

அறிக்கை தாக்கல் செய்யக் கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு!

நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விமானப் படைத் தளபதி சௌதாரிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு.

08 Dec 2021 3 PM

முடிந்தது மத்திய அமைச்சரவைக் கூட்டம்; 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு! 

பிபின் ராவத்
பிபின் ராவத்

விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர்கள் விபத்து தொடர்பாக விளக்கமளிக்க உள்ளனர்.

அந்தச் சந்திப்பின்போது, முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி ஆகியோரின் நிலை குறித்து தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

08 Dec 2021 3 PM

தரையிறங்க 5 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்து அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சுமார் 10 கிலோமீட்டர் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து
விபத்து

தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

08 Dec 2021 2 PM

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்.. முப்படைத் தளபதியின் நிலை? 

08 Dec 2021 2 PM

மீட்புப்பணிகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

08 Dec 2021 2 PM

கோவை விரைகிறார் முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மீட்புப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார். விபத்து நடந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் சுமார் 15 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

08 Dec 2021 2 PM

ஹெலிகாப்டர் விபத்து; மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

முப்படைத் தளபதி, அவர் மனைவி உட்பட 14 ராணுவ உயரதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குளான சம்பவம் தொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

08 Dec 2021 2 PM

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்; மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை!

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்திருக்கும் நிலையில், இந்த விபத்து தொடர்பாக மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்துக்கொண்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் குன்னூருக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

08 Dec 2021 2 PM

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு!

விபத்து
விபத்து

முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், பலி எண்ணிக்கை தற்போது 7-ஆக உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்திருக்கிறது.

08 Dec 2021 2 PM

குன்னூர் அருகில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது! மீட்புப்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர் | நேரலை

08 Dec 2021 1 PM

முப்படைத் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது!

கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ராணுவ உயரதிகாரிகளுடன் சென்று ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர், காட்டேரிபாதை அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குளானது. அதில், பயணித்தவர்களில் 4 பேர் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகிய நிலையில் மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

பிபின் ராவத்
பிபின் ராவத்
iaf tweet
iaf tweet

இந்த நிலையில், அந்த ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

08 Dec 2021 1 PM

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது அதிக மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து
விபத்து

ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்னதாக தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4 விபத்தில் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹெலிகாப்டரில் பயணித்த மற்றவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய

கூடுதல் விவரங்கள் விரைவில்...