Published:Updated:

`மைக் கிடைத்துவிட்டது என்பதற்காகப் பேசக் கூடாது!' - கடுகடுத்த அமைச்சர் பாஸ்கரன்

ஜெகதீஷ் ஹர்மனி
ஜெகதீஷ் ஹர்மனி

``மைக் கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. அதிகாரிகளிடம் மனுவாகக் கொடுக்க வேண்டும்."

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மருத்துவ மனையில்
மருத்துவ மனையில்

அப்போது தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஸ்ரீ ஜெகதீஷ் ஹர்மனி உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இதில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகதீஷ் ஹர்மனி, `நகர்ப்பகுதி, பேரூராட்சி மற்றும் கிராம பகுதியில் துப்புரவுப் பணியாளர்களின் பணி அளப்பரியது. துப்புரவுப் பணியாளர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர். விரைவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்புரவுப் பணியாளர்களை அழைத்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.

கூட்ட அரங்கில்
கூட்ட அரங்கில்

துப்புரவுப் பணியாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்" என்றார். துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தில் ஒருவர் ஜெகதீஷ் ஹர்மனியிடம் மைக்கில் கூறுகையில், `கூட்டத்தில் மற்ற அதிகாரிகள் சொல்வதெல்லாம் பொய்யான தகவல். சிவகங்கை மாவட்டத்தில் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. அதிகாரிகள் உண்மைக்கு மாறாகச் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கண்துடைப்புக்காக மட்டுமே அனைத்துப் பணிகளும் நடைபெறுகிறது. ஏ.டி, பஞ்சாயத்து அலுவலகத்தில்தான் நிறைய ஊழல் நடக்கிறது. சில துப்புரவுப் பணியாளர்களுக்கு புதிய வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. கிளவுஸ், செருப்பு, சீருடை, சோப்பு உள்ளிட்ட எதுவும் கொடுப்பதில்லை. இவ்வாறு நடந்தால் எப்படி தமிழ்நாடு தூய்மையாக மாறும்'' என்று கேள்வி எழுப்பினார். அரங்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் இருந்தபோது அவர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் அனைவரும் வாயடைத்துப் போயினர்.

`மைக் கிடைத்துவிட்டது என்பதற்காகப் பேசக் கூடாது!' - கடுகடுத்த அமைச்சர் பாஸ்கரன்

அப்போது அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசுகையில், ``மைக் கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க வேண்டும்" எனக் கடுகடுத்தார். தேசிய துப்புரவு ஆணையத்தில் இருந்து அதிகாரிகள் வருகிறார்கள் என்பதற்காகச் சிவகங்கை மாவட்டத்தில் திடீர் என்று பல்வேறு தூய்மைப் பணிகள் செய்யப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு