Published:Updated:

கோவை: `ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவையில் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக கோவை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று குறைந்துள்ளது.

ஆய்வு
ஆய்வு
கோவை:``தடுப்பூசி இருக்கிறது; ஆனால் மக்களுக்கு செலுத்துவதில்லை" - குற்றஞ்சாட்டும் வானதி சீனிவாசன்

அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம். தொழில் நிறுவனங்கள் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும்.

அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். கொரோனா பாதித்த நோயாளிகள் ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதால் தொற்றுப் பரவல் அதிகரிக்கிறது. சென்னையில் உள்ளதுபோல கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை கோவையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை
கோவை

முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்படவுள்ளது. அதேபோல ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு பணிபுரியும் நபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, 10 நாள்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் வீணடிக்காமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

மக்கள் தொகை அதிகமுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகள் சம்பாதிப்பதற்கான நேரம் இதுவல்ல. தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மனசாட்சிபடி செயல்பட வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு