தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருந்தார். கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் 100 சதவிகிதம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதைப் பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கவலைப்பட வேண்டாம்.
தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில் இப்போதும் ஏழு வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளன. மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசுதான் சொந்தமாக வைத்திருக்கிறது.

பிற நாடுகள், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்படவில்லை. மக்கள் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் பெட்டகம் வழங்குவதில் கடந்த ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டது. குழு அமைத்து அதை ஆய்வு செய்துவருகிறோம். தமிழகத்தில் 355 ஒன்றியங்களில் இல்லம் தேடி மருத்துவம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என மத்திய அரசுதான் அறிவித்துள்ளது. முன்களப் பணியாளர்கள் நீங்கலாக, பிறருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்” என்றார்.