Published:Updated:

``15 நாள்களில் 60 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்!"- அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு

அமைச்சர் மெய்யநாதன்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளைச் சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

``15 நாள்களில் 60 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்!"- அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளைச் சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

Published:Updated:
அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடி, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சுற்றுச்சூழல், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமத்தில் முத்தரையர் தெருவில் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர்கள், ``சொந்த மனைப் பட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் இருந்துவருகிறோம்" என அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

அதைத் தொடர்ந்து அந்த மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ``15 நாள்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். வேம்படி கிராமத்திலிருந்து முத்தரையர் தெரு ஒரு கிலோமீட்டர் தூரம். சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இங்கு சாலை வசதி இல்லை. அதைக் கேட்டறிந்த அமைச்சர், உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். வேட்டங்குடி பகுதியிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்றும் அமைச்சர் ஆய்வுசெய்தார். பின்னர் இருவக்கொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். சாலைகளில் தண்ணீர் இன்னும் வடியாமல் தேங்கியிருப்பதால் டிராக்டர், இருசக்கர வாகனத்திலும் அமைச்சர் குடியிருப்புகளை பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இந்தப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் காரணத்தால் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தங்கியிருக்கிறார்கள். வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். 

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் 34,852 ஹெக்டர் நிலம் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்" என்றார்.