Published:Updated:

``இந்த இரண்டும் இருந்தால்தான் அது நல்லாட்சி!" - ஆலோசனைக் கூட்டத்தில் பி.டி.ஆர்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதி ஆதாரங்களை சரிசெய்வதன் மூலம் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற முடியும். உதாரணமாக, ரூ.80,000 கோடி என்பது நிதிநிலையில் ஊரக வளர்ச்சி, மாநகராட்சி, கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கும் சேர்த்து செய்யப்படும் செலவினம் ஆகும்.

``நிதி மேலாண்மையும், ஆளுமையும் ஒன்றாக செயல்பட்டால் நல்லாட்சியாக அமையும். தேவையான நிதியை ஈட்டுவது, அதை முறையாக ஈட்டுவது, எங்கிருந்து எவ்வளவு ஈட்டுவது என்பதை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துவதுதான் சிறந்த அரசாங்கத்திற்கு அழகு" என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆய்வுக் கூட்டம்
ஆய்வுக் கூட்டம்

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மதுரையில் அண்மையில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பேசும்போது, ``மூலதனச் செலவை எந்தெந்த மாநிலம் அதிகமாக்குகிறதோ, அங்கெல்லாம் வளர்ச்சி இருக்கும். சாலைகள், சிறு துறைமுகங்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி, தனியார் முதலீடு போன்றவை வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்கும்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: "நாங்கள் எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசம்"

14-வது நிதிக்குழு, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தணிக்கை குழு ஆகியவை உற்பத்தித் திறன் அடிப்படையில் வைத்த பொதுவான கருத்தின்படி, 2014-க்கு முன்னால் தமிழ்நாடு அரசின் வருவாய், உற்பத்தியில் 10 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அது படிப்படியாக குறைந்து 6.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் 11.5 சதவிகிதமாக இருந்த வருமானம், தற்போது 7.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அதிலும் கொரோனா காலத்தில் 6.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. சுமார் ரூ.70,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை அரசுக்கு வருவாய் வர வேண்டியுள்ளது. இது பற்றி விரிவாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிதி ஆதாரங்களை சரிசெய்வதன் மூலம் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற முடியும். உதாரணமாக, ரூ.80,000 கோடி என்பது நிதிநிலையில் ஊரக வளர்ச்சி, மாநகராட்சி, கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கும் சேர்த்து செய்யப்படும் செலவினம் ஆகும்.

ஆய்வுக் கூட்டம்
ஆய்வுக் கூட்டம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மூலதனச் செலவாக ஒரு லட்சம் கோடி ரூபாய்கூட செலவிடவில்லை. அதாவது, வருடத்திற்கு ரூ.25,000 கோடி கூட செலவிடவில்லை. நல்லாட்சியின் அடையாளமே உற்பத்தியில் 3% முதலீடு செய்யவதுதான். ஆனால், கடந்த வருடம் உற்பத்தியில் 1.5% கூட முதலீடு செய்யவில்லை.

அதனால் கூடுதலாக ரூ.30,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை மூலதனச் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதுவரை செய்ததைவிட இரண்டு மடங்கு செலவு செய்ய வேண்டும். கூடுதல் சாலை வசதி, விவசாயம், குடிநீர் வசதி, துறைமுகங்கள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் செய்திட வேண்டும். இதனைச் செய்தால்தான் வளர்ச்சிக்கான தெளிவான பாதையில் செல்ல முடியும்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
``இலவச திட்டங்களால் தமிழகம் பின்தங்கவில்லை!" - அமைச்சர் பி.டி.ஆர்

இந்தியாவிலேயே... ஏன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மூலதனம் செய்யக்கூடிய இடமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றும் வகையில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும் இலக்கு.

உலக அளவில் மனித வளம் மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும். இதற்காக பல ஏற்பாடுகளை கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். உலகின் சிறந்த பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழுக் கூட்டத்தில் முதல்வர் இதை தெரிவித்திருக்கிறார். மூலதன செலவை இரண்டு மடங்காக்கிட வேண்டும். அதற்கு நிதி எந்த அளவிற்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் அதற்கான செயல் திட்டம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு