Published:Updated:

அதிதீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

ஆர்.பி.உதயக்குமார் ( வி.ஶ்ரீனிவாசுலு )

பருவமழை தீவிரமடையும் காரணமாக, தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அதிதீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

பருவமழை தீவிரமடையும் காரணமாக, தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

Published:Updated:
ஆர்.பி.உதயக்குமார் ( வி.ஶ்ரீனிவாசுலு )

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறுகையில், ``தமிழகத்துக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் அதிகப்படியான மழை கிடைக்கும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்துக்கு மொத்த மழையில் 47.32 சதவிகிதம் மழை கிடைக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 28.10.2020 அன்று தொடங்கியது. அன்று முதல் 16.11.2020 வரை இயல்பாகப் பதிவாக வேண்டிய மழையின் அளவு 287.9 மி.மீ. ஆனால், 37 சதவிகிதம் குறைவாக 180.7 மி.மீ அளவுதான் பதிவாகியிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான மழை பெய்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவாக மழை பதிவாகியுள்ளது.

கடந்த பதினைந்து ஆண்டுகளின் தரவுகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம் 4,133 பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் - 321. அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் - 797. மிதமான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் - 1,096. குறைவான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் - 1,919.

பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளிலுள்ள மக்களைத் தங்கவைக்க ஏதுவாக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 தங்கும் மையங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் என 4,680 தங்கும் இடங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தயார்நிலையில் உள்ளன. பேரிடர் பணிகளை மேற்கொள்ள 662 பல்துறை மண்டலக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அதோடு, பேரிடர் காலத்தில் உடனடியாகச் செயல்பட 43,409 முதல்நிலை மீட்பாளர்கள் (First Responders) தயார்நிலையில் இருக்கிறார்கள். இவர்களில் 14,232 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் கால்நடைகளைப் பாதுகாக்க 8,871 முதல்நிலை மீட்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரிடர் காலத்தில் முறிந்துவிழும் மரங்களை வெட்டி அகற்றவும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், பாம்பு பிடிக்கும் திறனுள்ளவர்கள், நீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்றும் நீச்சல் வீரர்களும் தயார்நிலையில் இருக்கிறார்கள். மீட்புப்பணிக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் தயார்நிலையில் இருக்கின்றன. பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அவசர காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை TNSMART மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
வி.ஶ்ரீனிவாசுலு
அவசரகாலங்களில் மக்கள் தகவல் தொடர்புக்காக : மாநில அவசரகால கட்டுப்பட்டு மையத்தின் தொடர்பு எண் -1070 மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு எண் - 1077

மேலும், வடகிழக்குப் பருவமழை, மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மேலாண்மைக்கான செயல் திட்டம் - 2020 ஆகியவற்றின் தொகுப்பு மற்றும் அவசரகால தொலைபேசிக் கையேடு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism