`மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற 2021 மே மாதம் 7-ம் தேதி முதல் மார்ச் 14-ம் தேதி வரை இந்த பத்து மாதங்களில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட 15,74,543 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய 10,92,064 விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படும்' என பேரவையில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் குடும்ப அட்டைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் அளித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி.
மேலும், நியாய விலைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்க முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிராக்ஸி முறை மூலம் பொருள்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்படும்.
அதாவது, மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆகியோரிடமிருந்து இதற்கான அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. அதைப் பூர்த்தி செய்து விண்ணப்பிப்பவர்களின் குடும்பத்திலுள்ள 5 வயதுக்கு மேற்பட்டோர் யார் வேண்டுமானாலும் நியாய விலைக் கடையிலிருந்து பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

முதியோர் உதவித் தொகை வாங்குபவர்களுக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படும். அவர்களின் குடும்ப அட்டை ரத்தாகாது.
அது மட்டுமல்லாமல் ஒரு தனி நபர் தனியாக சமைத்து தனியாக வாழ்ந்து வருவாரெனில் அவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி அந்த நபருக்கு 5 கிலோ அரிசி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.