கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதி பூண்டியில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் ஏழாவது மலையில் காட்சி அளிக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகை புரிகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளியங்கிரி மலையில் ஆய்வு செய்தார். நேற்று காலை 7 மணியளவில் மலையேறத் தொடங்கினார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வந்தார்.
கடந்த சில நாள்களாக வெள்ளியங்கிரியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பாதுகாப்புக்காக வனத்துறை ஊழியர்கள், அறநிலையத் துறை ஊழியர்கள், மருத்துவக்குழுவினர் உடன் சென்றனர். பக்தர்களுக்கான வசதிகள், திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் சேகர்பாபு, “சட்டசபை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக் கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை, மலையேறிப் பார்வையிட்டோம்.” என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மலை ஏறி சாமி தரிசனம் செய்து கிட்டத்தட்ட 22 மணிநேரம் நடைபயணத்துக்குப் பிறகு, இன்று அதிகாலை 5 மணியளவில் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கீழே இறங்கினர். பொதுவாகவே ஆபத்தான பாதை என்பதால் வெள்ளியங்கிரி மலைப் பாதையில் ஆய்வு செய்யும் அதிகாரிகள், அமைச்சர்கள் குறைவு.

அந்த வகையில் வெள்ளியங்கிரி மலை மீது முதன் முதலில் ஏறிய அமைச்சர் என்கிற பெருமையை சேகர்பாபு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.