Published:Updated:

'உப்புப் போட்டுச் சாப்பிடுபவராக இருந்தால்...' - அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

மின்சாரத்துறை கமிஷன் குற்றச்சாட்டு விவகாரத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ``ஒவ்வொரு நாளும் ஓர் ஆவணத்தை வெளியிடுவோம். அவர் வாயிலிருந்தே உண்மை வரவைப்போம்” என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை
'ஒவ்வொரு நாளும் ஓர் ஆவணம்... அவர் வாயிலேயே உண்மை வரும்!' - செந்தில் பாலாஜிக்கு சவால்விடும் அண்ணாமலை

இந்த நிலையில், கோவை மாவட்டத்துக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, இன்று கோவை வந்த செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செந்தில் பாலாஜி கூறுகையில், ``அரிச்சுவடிகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியதில்லை. அண்ணாமலை விவகாரத்துக்கு, பெரியாருடைய விளக்கத்தைச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.

உண்மையில் அவர் நல்ல மனிதராக இருந்தால், சாப்பாட்டுக்கு உப்புப் போட்டுச் சாப்பிடுபவராக இருந்தால் நான் கேட்டதற்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

எந்த ஆதாரமும் இல்லாமல், தன்னுடைய இருப்பைக் காட்டுவதற்காக இதைச் சொல்கிறார். அரவக்குறிச்சியிலிருந்து அனுப்பிவிட்டோம். கோவையில் ஏதாவது திட்டத்தை வைத்திருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வர் கோவைக்குப் பல திட்டங்களை வழங்கப்போகிறார். அது தொடர்பான ஆய்வுக்காக இங்கு வந்திருக்கிறோம். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மின்சார வாரியம் சார்பாக, பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு தொடங்கியிருக்கிறோம்.

கோவை
கோவை

அந்தக் குழுவில் நானும் உயரதிகாரிகளும் இருக்கிறோம். எந்தப் பகுதியில் குறைகள் இருந்தாலும், அதை வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டால், வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு