Published:Updated:

கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி! - திமுக-வின் திட்டம் என்ன?

செந்தில் பாலாஜி மாதிரியான ஆளுமைமிக்க நபர்களால் மட்டுமே, வேலுமணியையும் எதிர்த்து அரசியல் செய்து, கட்சியை வளர்க்க முடியும் என்று தலைமை நம்புகிறது.

மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த, பொது மக்களுக்குச் சென்றடையவேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்க, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோவை மாவட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
``நான் பேசவில்லை; நீங்கள் பேசுங்கள், கேட்கிறேன்!" - அமைச்சரால் உற்சாகத்தில் கோவை தொழில்துறையினர்

கோவை மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் ராமசந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். அப்படியிருக்கும்போது கோவைக்கு என்று செந்தில் பாலாஜியை நியமித்ததற்கான காரணம் குறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

``செந்தில் பாலாஜியைக் கோவைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்போகிறார்கள் என்று கடந்த சில மாதங்களாகவே பரவலாகப் பேச்சுகள் எழுந்துகொண்டிருந்தன. கோவை மாவட்டத்துக்கு என்று திமுக-வுக்கு எம்.எல்.ஏ-க்கள் இல்லை. பொறுப்பு அமைச்சர்களாகப் போடப்பட்டிருந்த அமைச்சர்கள் ராமசந்திரன், சக்கரபாணி மீது ஏராளமான புகார்கள் எழுந்தன.

கோவை
கோவை

அதிமுக ஆட்சியில் வேலுமணி பவர்ஃபுல்லாக இருந்ததால், கோவைக்கு தனிக்கவனம் செலுத்த முடிந்தது. அதே மாதிரியான பவர்ஃபுல்லான நபர் இருந்தால்தான் கோவைக்கு கவனம் செலுத்த முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"குறைந்த விலையில் தரமான சேவை கொடுப்பதே இலக்கு" - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தவிர வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கோவை மாவட்டத்தில் திமுக-வை வளர்க்க வேண்டும். கடந்த தேர்தலில் திமுக-வால் இங்கு ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. எஸ்.பி.வேலுமணியின் அசுர வளர்ச்சி திமுக-வுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. தலைவர் ஸ்டாலினுக்கே வேலுமணி அதிகக் குடைச்சல் கொடுத்திருக்கிறார்.

வேலுமணி
வேலுமணி

செந்தில் பாலாஜி மாதிரியான ஆளுமைமிக்க நபர்களால் மட்டுமே வேலுமணியையும் எதிர்த்து அரசியல் செய்து கட்சியை வளர்க்க முடியும் என்று தலைமை நம்புகிறது. கரூரில் சிட்டிங் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை வீழ்த்த, அங்கு அதிமுக-வை வாஷ்அவுட் செய்தார்.

அதேபோல கோவை மாவட்டத்திலும் மாயாஜாலம் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். கோவையிலிருந்து கொங்கு மண்டலம் முழுவதையும் கன்ட்ரோலில் எடுக்க வேண்டும் என்பது செந்தில் பாலாஜியின் விருப்பம். சில மாதங்களுக்கு முன்பே கோவை விமான நிலையம் அருகே வீடும் பார்த்துவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

விரைவில் அதிரடிகளை எதிர்பார்க்கிறோம். செந்தில் பாலாஜியின் வருகை கோவை திமுக-வுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது” என்று உற்சாகமடைகின்றனர் உடன்பிறப்புகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு