Published:Updated:

``அவருக்குப் புரிதலும் இல்லை... பக்குவமும் இல்லை” - அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

``யாராவது தவறான கருத்தைக் கூறினால், அடுத்த முறை அவர்களிடம் அது குறித்து நீங்கள் கேட்க வேண்டும். அந்த நபருக்குப் புரிதலும் இல்லை, புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமும் கிடையாது.” - செந்தில் பாலாஜி

``அவருக்குப் புரிதலும் இல்லை... பக்குவமும் இல்லை” - அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி

``யாராவது தவறான கருத்தைக் கூறினால், அடுத்த முறை அவர்களிடம் அது குறித்து நீங்கள் கேட்க வேண்டும். அந்த நபருக்குப் புரிதலும் இல்லை, புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமும் கிடையாது.” - செந்தில் பாலாஜி

Published:Updated:
செந்தில் பாலாஜி

கோவை நவஇந்தியா பகுதியில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, ``தமிழ்நாட்டின் தொழில் தலைநகரமாக கோவை விளங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துவருகிறார். தொண்டர்கள் நாடாளுமன்றத் தேர்தலை மனதில்வைத்துச் செயல்பட வேண்டும்.

திமுக செயற்குழுக் கூட்டம்
திமுக செயற்குழுக் கூட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட, கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் ஆளுக்கு ஒரு பூத் எடுத்திருந்தால் கோவையில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். அணிகள் போட்டி போட்டுச் செயல்பட வேண்டும்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, ``உங்களையெல்லாம் (பத்திரிகையாளர்கள்) தரக்குறைவான வார்த்தையில், சொல்லக் கூடாத வார்த்தைகளில் பேசினார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஒருவர் பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஐந்து நாள்களுக்கான நிலக்கரி இருப்பு இருந்தது. ஆனால், `உற்பத்தி செய்வதை நிறுத்தி, தனியாரிடம் கொள்முதல் செய்தனர்’ என்று கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனடியாக நான் அதற்கு தூத்துக்குடியில் எவ்வளவு நிலக்கரி இருந்தது என்று தரவுகளுடன் விளக்கம் அளித்தேன். யாராவது தவறான கருத்தைக் கூறினால், அடுத்த முறை அவர்களிடம் அது குறித்து நீங்கள் கேட்க வேண்டும். அந்த நபருக்குப் புரிதலும் இல்லை, புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமும் கிடையாது. 'நானும் ஓர் இயக்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

என் செய்திகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வர வேண்டும்' என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகிறார். அவரது கருத்துக்கு விளக்கம் கேட்டு, உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism