Published:Updated:

`வேலுமணி கைது எப்போது?!' - திமுக-வினர் கேள்விக்கு செந்தில் பாலாஜி சஸ்பென்ஸ் பதில்

செந்தில் பாலாஜி
News
செந்தில் பாலாஜி

``நமக்குப் பின்னால் ஓடுபவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும்போது, பின்னால் திரும்பிப் பார்த்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்." - செந்தில் பாலாஜி

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது. இதில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திமுக செயற்குழு
திமுக செயற்குழு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கோவை விசிட் குறித்தும் பேசப்பட்டது.

கூட்டத்தில் பேசிய திமுக உடன்பிறப்புகள் சிலர், ``இப்போதும் இங்குள்ள அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குத்தான் விசுவாசமாக உள்ளனர். நம் பேச்சைக் கேட்பதில்லை. நாம் சொன்னால் குப்பைகூட அள்ளுவதில்லை.” என்றனர். கார்த்திகேய சிவசேனாபதி பேசும்போது, “வேலுமணி ரெய்டு முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.

வேலுமணி
வேலுமணி

அவரை எப்போது கைதுசெய்யப் போகிறீர்கள். நான் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் என்ற அடிப்படையில் கேட்கிறேன். தினசரி சமூக வலைதளங்களில் என்னிடம் அதுகுறித்துப் பலர் கேட்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைதுசெய்ய தாமதம் ஆவதால், சமரசம் ஆகிவிட்டீர்களா என்றெல்லாம் கேட்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை” என்று செந்தில் பாலாஜியைப் பார்த்து பேசினார். சிவசேனாபதியின் கருத்தை ஆமோதிப்பதுபோல, கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கைதட்டி அதே கேள்வியை முன்வைத்தனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கடைசியாக மைக் பிடித்த செந்தில் பாலாஜி , ``பூத் கமிட்டி அமைக்கப்பட்ட மாவட்டங்களில் முதல் மாவட்டம் கோவை. உள்ளாட்சித் தேர்தலில் பூத் கமிட்டியினர் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தரவிருக்கிறார். காலை உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைக்கவிருக்கிறார். மாலையில் கொடிசியா மைதானத்தில் 25,000 பேர் கலந்துகொள்ளும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதிகாரிகள் அவர்களின் பேச்சைத்தான் கேட்கின்றனர் எனச் சிலர் பேசினீர்கள்.

திமுக செயற்குழு
திமுக செயற்குழு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் திமுக வென்றது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அதிகபட்சம் 75 நாள்கள்தான். நம் கவுன்சிலர்கள், மேயர்கள் வந்துவிடுவார்கள். அதன் பிறகு நாம் சொல்வதைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்... கரூரிலிருந்து கோவைக்குத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக நிர்வாகிகள் வந்துள்ளனர்.

திமுக செயற்குழு
திமுக செயற்குழு

அவர்களுடன் கோவை மாவட்ட திமுக-வினர் இணைந்து பணியாற்ற வேண்டும். விருப்பு வெறுப்புகளை புறம்தள்ளி கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்” என்றவர், வேலுமணி கைது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார்.

``ரெய்டு முடிந்துவிட்டது, கைது எப்போது, அதிகாரிகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை என்று சொல்கின்றனர். நமக்குப் பின்னால் ஓடுபவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும்போது, பின்னால் திரும்பிப் பார்த்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

நம்ம மட்டும்தான் ஜெயிக்க போகிறோம், அந்த தைரியம் மனதுக்கு வேண்டும். பொறுமையாகச் செல்வோம். சட்டம் தன் கடமையைச் செய்யும். நாம் நம் பணிகளைச் செய்வோம்” என்றார்.