Published:Updated:

`இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்!' - அதிமுக-வை எச்சரிக்கும் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
News
செந்தில் பாலாஜி

``தங்கள் கையிலிருந்த ஆட்சி அதிகாரங்கள் பறிபோய்விட்டன என்கிற விரக்தியில் அதிமுக-வினர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.’’ - அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை உக்கடம் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ``கோவை மாநகராட்சிப் பகுதியில் சாலைகளைச் சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேர்தல் நேரத்தில் 505 வாக்குறுதிகள் கொடுத்தோம். அவற்றில் 202 வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். ஆறு மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மிகப்பெரிய சாதனை. மீதமுள்ள வாக்குறுதிகளை முதல்வர் படிப்படியாக நிறைவேற்றுவார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் அரசியல் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மீறி நடத்துபவர்கள்மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன. இதையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக-வினர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

வேலுமணி
வேலுமணி

தங்கள் கையிலிருந்த ஆட்சி அதிகாரங்கள் பறிபோய்விட்டன என்கிற விரக்தியில் பேசப்பட்ட கருத்துகள் அவை. ஆனாலும், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவையில், கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி நிதிகளைப் பெற்றதாகவும், அதற்கான பணிகளையெல்லாம் நிறுத்திவைத்திருப்பதாகவும் மாயத்தோற்றத்தை உருவாக்கிவருகின்றனர். உண்மையில், 2013-ம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்ட சாலைப் பணிகளைக்கூட, அவர்கள் மேற்கொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக, அவர்கள் கட்சிக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தங்கமணி
தங்கமணி

கண்ணுக்குத் தெரிந்த நிலக்கரி காணாமல்போயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். இதுதான் வழக்கின் தன்மை. நான் கேட்ட கேள்விகளுக்கு தங்கமணியிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை” என்றார்.