Published:Updated:

முதல்வர் ஸ்டாலினின் கோவை விசிட்: `ஒரு லட்சம் பேர் டார்கெட்’ - செந்தில் பாலாஜி போடும் மெகா பிளான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதல்வர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி

`புகார் மனுக்களுடன் யாரும் வர வேண்டாம். என்னிடம் புகார் கொடுக்க வருபவர்கள், அதற்கு முன்பு உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ - கோவை உடன்பிறப்புகளுக்கு செந்தில் பாலாஜி அட்வைஸ்.

சட்டசபைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்த கோவை தி.மு.க-வை வளர்த்தெடுக்கும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுவை வழங்குதல் தி.மு.க-வில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு
மோதலுக்குத் தயாராகும் வேலுமணி - செந்தில் பாலாஜி; அனல் பறக்கும் கோவை உள்ளாட்சி வியூகங்கள்!

இதையொட்டி கோவை தி.மு.க செயற்குழு நடந்தது. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் ஆகியோருடன் ஆ.ராசாவும் செந்தில் பாலாஜியும் மேடையில் அமர்ந்தனர்.

நீலகிரி எம்.பி-யும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசுகையில், ``கோவை மாவட்டம் ஏன் தோற்றது என்பதற்கான அனைத்துத் தகவல்களும் தலைமைக்குத் தெரியும். நீங்கள் பொய் சொன்னால்கூட, உளவுத்துறை மூலம் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும். அ.தி.மு.க-வினர் இனி கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தை உள்ளாட்சித் தேர்தல் மூலம் உணர்த்த வேண்டும்.

ஆ.ராசா
ஆ.ராசா

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதற்காகத்தான், செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளனர். வேலுமணியின் பாச்சா செந்தில் பாலாஜியிடம் பலிக்காது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ``எந்த நேரத்திலும் நகர்ப்புறத் தேர்தல் அறிவிப்பு வரலாம். அதற்கு கோவை தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் வெற்றிதான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலில் நம்மால் 10 தொகுதிகளையும் கைப்பற்ற முடியவில்லை. அது ஏன் என்று நாம் யோசிக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

புகார் மனுக்களுடன் யாரும் வர வேண்டாம். என்னிடம் புகார் கொடுக்க வருபவர்கள், அதற்கு முன்பு உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்வோம். பூத் கமிட்டி அமைப்பதுதான் முதல் பணி.

அனைத்து பூத்களுக்கும் நான் வருவேன். சம்பந்தப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள், நான் வரும்போது அந்த பூத்திலுள்ள அனைத்து வீடுகளின் விவரங்களையும் சொல்ல வேண்டும். அவர்களின் தேவைகளை நாம் அறிந்துவைத்திருக்க வேண்டும். நாம் நினைத்தால் ஒரே நாளில் அவர்களின் கோரிக்கையைப் பூர்த்திசெய்ய முடியும்.

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு

கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம், அவர்களை நம் ஆதரவு மனநிலைக்குக் கொண்டுவர முடியும். பூத் கமிட்டியின் பணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார். கோவை குலுங்கியது என்கிற அளவுக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு அவரை வரவேற்க வேண்டும். ஒரு பூத்துக்கு ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்படும். குறைந்தது 50 பேர் அதில் இருக்க வேண்டும். பூத் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் அந்த வாகனத்திலேயே வர வேண்டும். பொறுப்பாளர்கள் விமான நிலையத்துக்கெல்லாம் வரக் கூடாது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து மக்களை வழிநடத்த வேண்டும். நாம்தான் ஆளும்கட்சி. நம் தலைவர்தான் முதல்வர். நம்மைக் கண்டுதான் எதிரிகள் பயப்பட வேண்டும். ஓர் அடி எடுத்து வைத்தால், இரண்டு அடி எடுத்துவைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஏராளமான மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன. அவையெல்லாம் மே 6-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. எதிரிகளின் பெயரை உச்சரித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இங்கு இன்னும் அரசு அதிகாரிகள் அவர்கள் (அ.தி.மு.க) சொல்வதைக் கேட்பதாகச் சொல்கின்றனர்.

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு

என்னைப் பொறுத்தவரை அந்த வாதம் தவறு. இது நம் அரசாங்கம். நாம்தான் அதைக் கையிலெடுக்க வேண்டும்; நம் கையில்தான் அது இருக்கிறது. வெற்றி என்பதை மட்டுமே இலக்காகக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு