Election bannerElection banner
Published:Updated:

ஜெ., பிறந்தநாள்: தாம்பூலம், ஹாட்பாக்ஸ் இன்னும் பல..! - தொகுதி மக்களுக்கு அமைச்சர் வேலுமணியின் பரிசு

அமைச்சர் வேலுமணி பரிசுப் பொருள்
அமைச்சர் வேலுமணி பரிசுப் பொருள்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தும் இலவச திருமணத்துக்காக அமைச்சர் வேலுமணி தனது தொண்டாத்தூர் தொகுதியில் பரிசுப் பொருள்கள் வழங்கிவருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். கடந்த ஆண்டு 72-வது பிறந்தநாள் என்பதால், 72 ஜோடிகளுக்கு இலவசமாகத் திருமணம் செய்துவைத்து, 72 வகை சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

சசி விடுதலை.. வேலுமணி-க்கு EPS செக்..புது ட்விஸ்ட்! | TN Elections 2021| Elangovan Explains

இது 73-வது பிறந்தநாள் என்பதால், 73 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து, 73 வகை சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளாக வேலுமணி, அவரது பிறந்தநாளில் இதைத் தொடர்ந்துவருகிறார். பொதுவாக, இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேலுமணி, தனது தொண்டாமுத்தூர் தொகுதியிலுள்ள அனைத்து மக்களையும் அழைப்பது வழக்கம்.

பரிசுப் பொருள் வண்டி
பரிசுப் பொருள் வண்டி

இந்த முறை, வரும் 18-ம் தேதி பேரூர் செட்டிபாளையம் பகுதியில் இந்தத் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி, சீர்வரிசைப் பொருள்களை வழங்கவிருக்கிறார்கள்.

இதற்காக, தொகுதி மக்களை அழைக்கும்போது, ஒவ்வொரு வீட்டுக்கும் தாம்பூலத் தட்டில் பழங்கள் மற்றும் வேட்டி சேலையுடன் பத்திரிகை வைக்கப்படும். இந்த ஆண்டு தேர்தல் வருவதாலோ என்னவோ, தாம்பூலத் தட்டு, வேட்டி, சேலையுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் ஹாட்பாக்ஸ் வழங்கப்பட்டுவருகிறது.

இந்தப் பரிசுப் பொருள்களை சரக்கு வண்டியில்வைத்து ஒவ்வொரு வீடாகக் கொடுத்துவருகின்றனர். தாம்பூலத் தட்டில் இரட்டை இலைச் சின்னத்துடன், வேலுமணி பெயர் பொரிக்கப்பட்டிருக்கிறது. சேலையிலும், இரட்டை இலை வருவதுபோல டிசைன் அமைக்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு