Published:Updated:

`சென்னையில் அதிக பாதிப்புகள் ஏன்?’ -அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

``இந்தியாவிலே தமிழகத்தில் தான் டெஸ்டிங் லேப் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான டெஸ்ட்களை எடுத்துள்ளோம். நாம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்கிறோம்” -விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர், `தமிழகத்தில் இன்று 203 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 117 பேர், பெண்கள் 86 பேர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 98 வயது மதிக்கதக்க பெரியவர் இன்று உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 -ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிகம் சோதனைகள் நடத்தப்படுகிறது. சென்னையில் பாதிப்புகள் அதிகம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இங்கு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் இன்று மட்டும் 3,200 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம். பத்திரிகை நண்பர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் அந்த பத்திரிகை அலுவலம் முழுவதும் நாம் பரிசோதனை செய்ததில் ஒரே அலுவலகத்தில் 30 நபர்களுக்கு பாசிடிவ் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் இருந்து வேறு யாருக்கும் பரவாமல் இருக்க அவர்கள் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது, நல்ல வேளையாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலே தமிழகத்தில் தான் டெஸ்டிங் லேப் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான டெஸ்ட்களை எடுத்துள்ளோம். நாம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் சுகாதாரப்பணியாளர்களுடன் உரையாற்றி வருகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளையும் முதலமைச்சரின் அறிவுரையின்படி செய்து வருகிறோம்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

மூத்த குடிமக்களுக்கு தேவையான சிறப்பு முன் ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமும் நாம் பேசி வருகிறோம். நிலவேம்புக்குடிநீர், கபசுரக்குடிநீர் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். மாவட்ட ஆட்சியருடன் வீடியோ கான்பிரஸிங் மூலம் முதலமைச்சர் பேசிவருகிறார். மருத்துவ குழுவினருடனும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த குழுக்களை கண்காணிப்பதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் நேரடி தொடர் கண்காணிப்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பயமோ பதற்றமே தேவையில்லை. அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு