Published:Updated:

`போராட்டம் நடத்தியும் நடக்காததை, நானே நிறைவேற்றியதில் மகிழ்ச்சி’ - நெகிழும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ

இரு வழித்தடங்களிலும் பேருந்து சேவை தொடங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தப் புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் உட்பட எங்கள் தோழர்கள் பலரும் கடந்த பல ஆண்டுகளாகவே போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளோம்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கும், கந்தர்வக்கோட்டையிலிருந்து வெட்டிக்காட்டுக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயங்கும் சேவையை கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை தொடங்கிவைத்தார்.

பேருந்து சேவையைத் தொடங்கிவைக்கும் எம்.எல்.ஏ
பேருந்து சேவையைத் தொடங்கிவைக்கும் எம்.எல்.ஏ

புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்துப் பேசிய கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை, ``இந்த இரு வழித்தடங்களிலும் பேருந்து சேவை தொடங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தப் புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் உட்பட எங்கள் தோழர்கள் பலரும் கடந்த பல ஆண்டுகளாகவே போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளோம். ஆனாலும், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில்தான், கந்தர்வக்கோட்டை தொகுதியில் நான் தற்போது எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசிடம் இந்தக் கோரிக்கையைக் கொண்டு சென்று, இந்த நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறேன். நான் போராட்டம் நடத்தி நிறைவேற்றப்படாத பேருந்து சேவையை, எம்.எல்.ஏ-வாக நான் தொடங்கிவைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கரூர்: பல வருட பேருந்து பிரச்னை; 5 நாள்களில் கிடைத்த தீர்வு! - மக்களை நெகிழவைத்த ஆட்சியர்

இதன் மூலம் எங்கள் பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். தொடர்ந்து கந்தர்வக்கோட்டை மக்களின் கோரிக்கைகளை மக்களின் பிரதிநிதியாக ஏற்று, அதிலும் மிகவும் அத்தியாவசியமான, நீண்ட வருடமாக எழும் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுப்பேன்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு