Published:Updated:

கொங்குநாடு சர்ச்சை: ``தமிழ்நாட்டைப் பிரிக்க நினைக்கவில்லை; ஆனால்..!" - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கொங்குநாடு தனி மாநில கோரிக்கை குறித்து பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கருத்து கூறியுள்ளார்.

`கொங்குநாடு அரசியல்' தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் இருந்து கொங்கு மண்டல அரசியல் சமூகவலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல். முருகன் குறித்த பா.ஜ.கவின் செய்திக்குறிப்பில் கொங்குநாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, கொங்குநாடு கோரிக்கையை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.

கோவை
கோவை
இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1

கொங்குநாட்டை புதிய மாநிலமாக பிரிக்க பா.ஜ.க சார்பில் ஆங்காங்கே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், கொங்குநாடு கோரிக்கை குறித்து பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து கூறவில்லை.

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், கொங்குநாட்டின் வரலாற்று தொடர்பு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியிருந்தார். கொங்குநாடு தனிமாநிலம் குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டோம். ``தமிழ்நாட்டைப் பிரித்து, கொங்குநாட்டைத் தனிமாநிலமாக்க வேண்டும் என்ற முடிவை கட்சி எடுக்கவில்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
‘கொங்கு நாடு' அரசியல் பின்னணியில் இயங்குவது யார், யார்?

இதில் எங்களுக்கு தீவிரமான கருத்து எதுவும் இல்லை. மக்களின் எண்ணம் எதுவாக இருக்கும் என்பது இன்றைய தேதிக்கு தெரியாது. ஆனால், இந்தக் குரல் இல்லவே இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

ஏற்கெனவே, கொ.ம.தே.க ஈஸ்வரன் கொங்கு நாடு குறித்து பேசிய வீடியோக்களைப் பார்க்க முடியும். அவர், கட்சி தொடங்கியது முதல் பல காலமாக இதுகுறித்து பேசி வருகிறார். இன்றைக்கு அவரே எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அதனால், இது முதல் குரல் என்று நினைக்க வேண்டாம். பல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முன்பே முன்வைத்த முழக்கம்தான் இது.

‘கொங்கு’ ஈஸ்வரன்
‘கொங்கு’ ஈஸ்வரன்

கொங்கு நாடு பகுதியைத் தனியாக பிரிக்க வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கவில்லை. ஆனால், வரக்கூடிய நாள்களில் அரசாங்கம் அந்தப் பிரதேசத்தை எப்படி அணுகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் இதில் இறுதி முடிவு எடுக்க முடியும்.

கட்சியில் இதுகுறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. ஆங்காங்கே தீர்மானங்கள் நிறைவேற்றினாலும், அது கட்சியின் அதிகாரபூர்வ முடிவு இல்லை. தொடர்ந்து புறக்கணிப்புக்குள்ளாகும்போது, இந்தப் பகுதிக்குத் தேவையான வளர்ச்சி இல்லை என்பதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. இதற்கு முன்பாகவும் இதை மக்களும், அரசியல் கட்சியினரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

உள்கட்டமைப்பு வசதி தொடங்கி தேவையான வளர்ச்சிப் பணிகள் எட்டப்படவில்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கொங்குநாடு விவகாரத்தில் தற்போதுவரை முடிவெடுக்கவில்லை. இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நகர்வுகளின் அடிப்படையில்தான் இறுதி முடிவை எட்ட முடியும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு