Published:Updated:

`அதை ஷேர் பண்ணதே நான்தான்; ஸ்டிங் ஆபரேஷன் இல்லை!' - வைரல் போட்டோ குறித்து வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் கலந்துகொண்ட ஒரு மீட்டிங் தொடர்பான புகைப்படத்தில், அவர் அமர்ந்திருந்த மேசையின் அருகே பணம் எண்ணும் இயந்திரம் இருந்தது. அதை வைத்து வானதி சீனிவாசனை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் பதிவுகள் வேகமாகப் பகிரப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பா.ஜ.க மூத்த தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரும் கருத்துகள், பதிவுகள் எப்போதும் லைம் லைட்டில் இருந்துகொண்டேயிருக்கும். இந்நிலையில், வானதி சீனிவாசன் கலந்துகொண்ட ஒரு மீட்டிங் தொடர்பான புகைப்படத்தில், அவர் அமர்ந்திருந்த மேசையின் அருகே பணம் எண்ணும் இயந்திரம் இருந்தது.

வானதி சீனிவாசன் விளக்கம்
வானதி சீனிவாசன் விளக்கம்
Fact Check: `வளர்ந்த மரத்தை நட்டாரா வானதி சீனிவாசன்?' - வைரலாகும் புகைப்படம்; உண்மை என்ன?

`தன லாபம்', `பணம் எண்ணும் இயந்திரம்' ஆகியவற்றை வைத்து வானதி சீனிவாசனை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் பதிவுகள் வேகமாகப் பகிரப்பட்டன. இதையடுத்து, அது தன்னுடைய அலுவலகமே இல்லை, தன் நண்பரின் அலுவலகம் என்று வானதி விளக்கம் அளித்துள்ளார்.

என்ன நடந்தது என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கூறுகையில், ``ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தேன். ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் சென்றபடியே மக்களிடம் குறைகளைக் கேட்டேன். புலியகுளம் அந்தோனியர் பள்ளி தடுப்பூசி முகாமை பார்வையிட்டேன்.

அம்மன் குளம் ராஜீவ்நகர் பகுதியில் மக்களின் குறைகளைக் கேட்டேன். நான் எங்கெல்லாம் சென்றேன், என்ன செய்தேன் என்பது என் ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் கொடுக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு தேசிய அளவிலான ஒரு ஆன்லைன் மீட்டிங் இருந்தது. மதியம் 1 மணிக்கு பொள்ளாச்சியில் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டுக்குச் சென்று வர நேரமில்லை. அதனால் ரேஸ்கோர்ஸ் அருகே தெரிந்த ஒருவரிடம் பேசி அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். காலை உணவை சாப்பிட்டுவிட்டு, மீட்டிங் செல்ல முயன்றேன். ஆனால், வீட்டுக்குள் சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் அவர்களின் அலுவலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளக் கூறினர்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அலுவலகம்
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அலுவலகம்

அது ஒரு சிட்பண்ட் அலுவலகம். `எம்.எல்.ஏ மேடம் இந்த சேரில் அமருங்கள்' என்று கூறி, வசதியான ஒரு சேரில் அமர வைத்தனர். அந்த போட்டோவை நான்தான் சமூகவலைதளங்களில் பகிர்ந்துவிட்டு பொள்ளாச்சி சென்றேன். வந்து பார்ப்பதற்குள் இவ்வளவும் நடந்துவிட்டது.

பொதுவாகவே சித்தாந்த ரீதியாகப் பிரிந்து இருப்பவர்களுக்கு சமூகவலைதளம் பெரிய ஆயுதமாக மாறியுள்ளது. சமூகவலைதளத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். சட்டசபை பணிகளை முடித்துவிட்டு, சனிக்கிழமை மாலைதான் கோவை வந்தேன். அன்றைய தினம் இரவே கட்சி சார்ந்த பணிகளை முடித்துவிட்டுத்தான் வீட்டுக்குச் சென்றேன்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அலுவலகம்
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அலுவலகம்

காலை 7 மணி முதலே தொகுதி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டேன். இவை எதுவுமே வெளியில் வராமல், அந்த ஒரு விஷயம் மட்டும் வருகிறது. அரசியல்வாதிகள் என்றாலே பணம் என்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

என் குடும்பத்தில் கணவரும் குழந்தைகளும் சம்பாதிப்பார்கள். அதுவெல்லாம் பின்னுக்குச் சென்றுவிடும். நான் நல்ல புடவை, வளையல், வாட்ச் அணியும்போதெல்லாம், எல்லாம் அரசியல் மூலம் வந்தது என்ற மனப்பான்மைக்குச் சென்றுவிடுகின்றனர். ஒருசில அரசியல்வாதிகள் அதற்குக் காரணமாகவும் இருக்கின்றனர்.

இப்படி ஒரு சூழ்நிலையில், தங்களுக்கு சாதகமாக ஏதாவது படங்கள் கிடைக்கும்போது அதை லிங்க் செய்து உருவகத்துக்குள் தள்ளிவிடுகின்றனர். சமூகத்தில் சமூகவலைதளம் இப்படி பெரிய ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டே இருக்கும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
`` `கன்னிப்பேச்சு' ஆட்சேபனை, கோவைக்கு தனி கவனம் செலுத்தும் முதல்வர்!" - வானதி சீனிவாசன் பேட்டி

எனக்கு மட்டும் இல்லை. அரசியல்வாதிகள், பிரபலங்கள் பலருக்கும் இது நடக்கும். இதை எப்படி கையாள வேண்டும் என்பதில் பக்குவமாக இருந்துவிட்டால் அது பெரியளவில் பாதிக்காது. வேறு யாராவது ஸ்டிங் ஆபரேஷன் செய்து எடுத்து போட்டிருந்தால்கூட பரவாயில்லை.

அதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளலாம். தனலாபம், மரம், இப்போது இந்தப் படம் வரை அனைத்துமே நானே சமூகவதைளங்களில் போட்டதுதான். தன லாபம் குறித்தும் நான் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன்.

என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு விழாவுக்கு நடந்த பூஜையின்போது ஐயர் அப்படி எழுதிவிட்டார். நான் அப்போதுதான் டெல்லியில் இருந்து விமானம் கிடைக்காமல் ரயிலில் கோவை வந்திறங்கினேன். நான் அலுவலகம் செல்லும்போது பூஜைக்கு எல்லாம் தயாராக இருந்தது. எனக்கு ஐயர் அப்படி எழுதியது ஒவ்வாமல் தெரிந்தது.

எம்.எல்.ஏ அலுவலக திறப்பு பூஜை
எம்.எல்.ஏ அலுவலக திறப்பு பூஜை

ஆனாலும், அதை நான் அந்த நேரத்தில் அழித்தால் அபசகுனமாகத் தோன்றலாம். அதனால் அப்படியே விட்டுவிட்டேன். அந்தப் படத்தையும் நான்தான் பதிவு செய்தேன். காரணம் நான் எதையும் கணக்கு போட்டு எல்லாம் செய்வதில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு