Published:Updated:

``இரண்டு நாள்களில் தொடங்கும் பருவமழை; படிப்படியாக அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

``இரண்டு நாள்களில் தொடங்கும் பருவமழை; படிப்படியாக அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Published:Updated:
வடகிழக்கு பருவமழை

சென்னை வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இந்தியப் பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் 23-ம் தேதி விலகியது. இந்த மாதத்தில் இதுவரை ஒன்பது சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

பாலசந்திரன்
பாலசந்திரன்

வடகிழக்கு பருவமழை தொடங்குவது சிட்ரங் புயலால் தாமதப்பட்டுள்ளது. பருவமழை காலதாமதமாகத் தொடங்குவது மழையின் தன்மையைப் பாதிக்காது. தற்போது, பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. அக்டோபர் 29-ம் தேதி தென் இந்தியப் பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இயல்பையொட்டி இருக்கும்.

இந்தியப் பெருங்கடலில் இரண்டு முனை துருவங்களில் நெகட்டிவ் என்றளவில் உள்ளதால் தமிழகத்துக்குப் பாதிப்பு கிடையாது. அதேபோல, பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை லாநினோ என்றநிலையில் இருக்கிறது. பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு இருப்பதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாகக் கணிக்க முடியாது. வடகிழக்கு பருவமழையின் முதல் பகுதி தொடர் மழையாக வரும் நவம்பர் 4-ம் தேதி வரை பெய்யக்கூடும்.

சென்னை மழை - பருவமழை
சென்னை மழை - பருவமழை
வி.ஸ்ரீனிவாசலு

அதற்கு அடுத்து மழைப்பொழிவு குறைந்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று தகவல் தெரிவித்தார்.