Published:Updated:

`ஆசியப் போட்டிக்காகனு சொல்லி மாற்றி தங்க வெச்சாங்க, ஆனா 21 வருஷமாச்சு' - வீடுகளுக்காக ஏங்கும் மக்கள்

கண்ணப்பர் திடல்

தற்காலிகமாகக் கண்ணப்பர் திடலில் தங்கவைக்கப்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் 21 ஆண்டுகளாக வீடில்லாமல் பரிதவித்துக் கொண்டிருப்பதாகத் தகவலறிந்து, அவர்களைச் சந்திக்கக் கண்ணப்பர் திடலுக்குச் சென்றோம்.

`ஆசியப் போட்டிக்காகனு சொல்லி மாற்றி தங்க வெச்சாங்க, ஆனா 21 வருஷமாச்சு' - வீடுகளுக்காக ஏங்கும் மக்கள்

தற்காலிகமாகக் கண்ணப்பர் திடலில் தங்கவைக்கப்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் 21 ஆண்டுகளாக வீடில்லாமல் பரிதவித்துக் கொண்டிருப்பதாகத் தகவலறிந்து, அவர்களைச் சந்திக்கக் கண்ணப்பர் திடலுக்குச் சென்றோம்.

Published:Updated:
கண்ணப்பர் திடல்

சென்னை சூளை, கண்ணப்பர் திடலில் உள்ள ஷெல்டரில் 21 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த இடத்துக்கு ஓம் ஃபார் ஓம்லெஸ் (Home For Homeless) என்று பெயர் உள்ளது.

ரிப்பன் பில்டிங் அருகே பிளாட்பாரத்தில் வாழ்ந்துவந்த மக்களை 21 ஆண்டுகளுக்கு முன்பாக, `ஆசியத் தடகள போட்டி நடக்கப்போகிறது.. அதற்கு நீங்கள் இடையூறாக இருக்கிறீர்கள்' என்று கூறிய அதிகாரிகள், அங்கிருந்து வெளியேற்றி தற்காலிகமாகச் சூளை கண்ணப்பர் திடலில் தங்க வைத்துள்ளனர்.

அப்போது அந்த மக்களிடம், `இன்னும் மூன்று மாதங்களுக்குள் உங்களுக்கு வீடுகளை ஒதுக்கித் தருகிறோம்' என்று உறுதியாகக் கூறி விட்டுச் சென்ற அதிகாரிகள் 21 ஆண்டுகளாகியும் இன்னும் தங்களுக்கு வீடுகளை ஒதுக்காமலிருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

தற்காலிகமாகக் கண்ணப்பர் திடலில் தங்கவைக்கப்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் 21 ஆண்டுகளாக வீடில்லாமல் பரிதவித்துக் கொண்டிருப்பதாகத் தகவலறிந்து, அவர்களைச் சந்திக்கக் கண்ணப்பர் திடலுக்குச் சென்றோம்.

கண்ணப்பர் திடல்
கண்ணப்பர் திடல்

கண்ணப்பர் திடலில் உள்ள பெரிய ஷெல்டர் ஹாலில், அட்டைகளாலும், தார்ப்பாய்களாலும் தடுப்புகளை அமைத்து மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஹாலுக்கு அருகிலும் சிலர் சிறிய அளவிலான குடிசைகளை அமைத்துத் தங்கி வந்தனர். மிகவும் குறுகிய இடத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

அங்கிருந்த மக்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஆசியப் போட்டிக்காகனு சொல்லி மாற்றி தங்க வெச்சாங்க, ஆனா 21 வருஷமாச்சு' - வீடுகளுக்காக ஏங்கும் மக்கள்

அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வம் நம்மிடம் பேசினார். ``21 வருடங்களுக்கு முன்னாடி ஆசிய தடகள போட்டிக்கு இடையூறாக இருப்பதாக ரிப்பன் பில்டிங் அருகே சாலையோரத்தில் இருந்த எங்களை இந்த ஷெல்டரில் அரசு அதிகாரிகள் தங்க வெச்சாங்க. மூன்று மாதங்கள்ல சென்னை ஜக்காபுரத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தருவதாக அப்போதிருந்த அதிகாரிகள் தெரிவிச்சாங்க. ஆனா, இன்றுவரை எங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படல. இப்ப இருக்கும் இடமும் ரொம்ப மோசமா இருக்கு, கட்டடமும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில இருக்கு. எங்களுக்கு அரசு உதவணும்" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்ணப்பர் திடலில் வசிக்கும் அமுல்ராணி பேசுகையில், ``இங்கு முறையான கழிவறை இல்ல... குளியலறை வசதியும் இல்ல. நாலைந்து குடும்பங்களுக்கு ஒரே ஒரு சமையலறை தான். இங்கு எல்லோருக்கும் தனித்தனி வீடெல்லாம் கிடையாது, பெரிய ஹாலை தார்ப்பாய் போட்டு அட்டைகளாக அடைத்து எல்லோரும் தனித்தனி குடும்பங்களாக வாழ்ந்துட்டு வர்றோம். குளியலறை முறையாக இல்லாததால பெண்களுக்கு அசௌகரியமான சூழல் நிலவுது. எத்தனையோ பெண்கள் சொல்ல முடியாத பாலியல் சீண்டலுக்கு ஆளாகுறாங்க. பெண்கள், ஆண்கள் என 120-க்கும் மேலான குடும்பங்களுக்குப் பொதுக்கழிப்பிடம் தான் . பொதுக்கழிப்பிடமும் சுத்தமாக இருக்குறதில்ல... தண்ணீர் பிரச்னை வேறு இருக்கு.

சின்ன வீட்டுக்குள் குடும்பத்தார் படுப்பதற்குகூட இடமில்ல, ஆண்கள் எல்லோரும் பிளாட்பாரத்தில் தான் தூங்குகிறார்கள். மூன்று மாதங்கள்ல வீடு தருவதாகச் சொன்னவர்கள், இன்றுவரை வீடு கொடுக்காமல் தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காங்க. எங்களுக்குச் சென்னைக்குள்ளேயே வீடு வேண்டும், சென்னைக்கு வெளியே வீடு ஒதுக்கீடு செய்தால் எங்கள் குழந்தைகளின் படிப்பும் எங்களோட வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்" என்றார்.

கண்ணப்பர் திடல்
கண்ணப்பர் திடல்

அந்தப் பகுதி மக்கள் வீடு ஒதுக்கீடு செய்யுமாறு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும், முதலமைச்சருக்குக் கடிதம் கொடுத்து இருக்கின்றனர். ஆனால், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருந்துகின்றனர்.

இது தொடர்பாக, (நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு) செபாஸ்டின் நம்மிடம் பேசுகையில், ``தனிமனிதனாக இருந்தால் மட்டுமே இதுபோல் ஷெல்டர்களில் தங்க வைக்க வேண்டும். ஆனால், இங்கே குடும்பம் குடும்பமாகத் தங்க வைத்துள்ளனர். இது அடிப்படை வாழ்வுரிமை மீறல். மேலும், சில காலங்களாக அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மக்கள் தொடர்ச்சியாகப் பலியாகிவருகிறார்கள். மக்களுக்காகத் திட்டமே தவிரத் திட்டத்துக்காக மக்கள் இல்லை என்பதை உணர்ந்து அவர்களுக்கு உடனடியாக வீடு ஒதுக்கித் தர அரசு முன்வர வேண்டும்" என்று கூறினார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து மண்டலம் ஐந்தின் செயற்பொறியாளர் சொக்கலிங்கத்திடம் கேட்டோம். ``அங்குள்ள மக்களுக்கு வீடு வழங்குவதற்கான சர்வே எடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைத்தோம். வாழ்வுரிமை மேம்பாட்டு வாரியத்திடமே அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கித் தரும் பொறுப்பு உள்ளது" என்றார்.

கண்ணப்பர் திடல்
கண்ணப்பர் திடல்

அதையடுத்து, கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடுகள் எப்போது எங்குக் கொடுக்கப்படும் என்ற தகவலைக் கேட்டறிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனைத் தொடர்புகொண்டோம். ``சட்டமன்ற உறுப்பினரான பின்னர் 11 முறை அந்த இடத்திற்குச் சென்று வந்துள்ளேன். அவர்களுக்கு முறையான வீடு வழங்குவதற்காகத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடமும், சென்னை மாநகராட்சியிடமும் வலியுறுத்தி வருகிறேன்" என்றார்.

21 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு வீடுகள் கிடைக்குமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது... அரசு இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism