Published:Updated:

`உன் இடுப்பில் தாலிக்கொடியாய் நான் இருப்பேன்!' - கணவருக்கு கடிதம் எழுதிய மனைவி; குழந்தையுடன் தற்கொலை

தற்கொலை செய்த திவ்யா, குழந்தை தர்ஷினி, உருக்குமான கடிதம்

``உன்னுடைய பொருளை நான் எடுத்துச் செல்கிறேன், என்னுடைய ஞாபகமாக தாலியை உன் இடுப்பில் அணிந்துகொள், காலம் முழுவதும் உன்னுடனே இருப்பேன். லவ் யூ முனிஸ். சாரிடா'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

`உன் இடுப்பில் தாலிக்கொடியாய் நான் இருப்பேன்!' - கணவருக்கு கடிதம் எழுதிய மனைவி; குழந்தையுடன் தற்கொலை

``உன்னுடைய பொருளை நான் எடுத்துச் செல்கிறேன், என்னுடைய ஞாபகமாக தாலியை உன் இடுப்பில் அணிந்துகொள், காலம் முழுவதும் உன்னுடனே இருப்பேன். லவ் யூ முனிஸ். சாரிடா'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Published:Updated:
தற்கொலை செய்த திவ்யா, குழந்தை தர்ஷினி, உருக்குமான கடிதம்

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் - திவ்யா தம்பதி. இவர்களுக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

முனீஸ்வரனுக்கும் திவ்யாவுக்கும் குடும்பத்தார் பார்த்து நடத்தி வைத்த திருமணம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசமாக இருந்தார்கள். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு `தர்ஷினி' எனப் பெயர் சூட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

தற்கொலை செய்த திவ்யா, குழந்தை தர்ஷினி, உருக்குமான கடிதம்
தற்கொலை செய்த திவ்யா, குழந்தை தர்ஷினி, உருக்குமான கடிதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் இவர்களது மகிழ்ச்சி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. குழந்தை தர்ஷினிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். தன் குழந்தைக்கு வலிப்பு நோய் இருப்பதை திவ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் தன் கணவரிடம் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் நேற்று காலை முனீஸ்வரன் வேலைக்குச் சென்ற பிறகு, குழந்தையுடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்ற திவ்யா, பூச்சிமருந்தை சாப்பாட்டில் கலந்து குழந்தைக்குக் கொடுத்துக் கொன்றுவிட்டு, அங்கே இருந்த கொட்டகையில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பரமக்குடியில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய முனீஸ்வரன், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் அருகில் உள்ள தோட்டத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.

தற்கொலை செய்த தோட்டம்
தற்கொலை செய்த தோட்டம்

அங்கு தன் குழந்தை தர்ஷினி வாயில் நுரை தள்ளியபடியும், மனைவி திவ்யா தூக்குமாட்டி இறந்து கிடந்ததையும் கண்டு கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

தகவல் அறிந்து நயினார்கோவில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து திவ்யா மற்றும் குழந்தை தர்ஷினி உடலைக் கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இறந்து கிடந்த குழந்தையின் அருகில் திவ்யா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில்,

``சிறுவயது முதல் கஷ்டப்பட்டேன். உன்னை திருமணம் முடித்த பின்பு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். நீ என்னை ரொம்ப நல்லா பார்த்துகிட்ட. யார் விட்ட சாபமோ நம்முடைய குழந்தை வலிப்பு நோயுடன் பிறந்தது நாளுக்கு நாள் எனக்குக் கவலையா இருந்துச்சு. அதனாலதான் இந்த முடிவை எடுத்து விட்டேன். சாரி டா, என் முனிஷ்க்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டாம்னுதான் இந்த முடிவை எடுத்துக்கிட்டேன். செல்லம் சாரிடா... நானும் எனது குழந்தையும் யாருக்கும் கஷ்டத்தை கொடுக்க நினைக்கவில்லை. என்னை மன்னித்துக்கொள், இந்த முடிவிற்கு நான்தான் காரணம்.

நயினார்கோவில் காவல் நிலையம்
நயினார்கோவில் காவல் நிலையம்

என்னையும் உன் குழந்தையையும் உன்னுடைய இடத்தில், நீ வாங்கிக் கொடுத்த இந்த ஆடையுடன் என்னை அடக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் நீ எனக்கு கடைசியாக வாங்கிக் கொடுத்த ஆடை இது. என்னால உன் வாழ்க்கை போச்சேன்னு நினைக்காத. நீ வேறு திருமணம் செய்து கொள், சத்தியமா நீ நல்லா இருப்ப.

உன்னுடைய பொருளை (குழந்தை) நான் எடுத்துச் செல்கிறேன். என்னுடைய பொருளை (தாலி), என் ஞாபகமாக அணிந்து கொள். காலம் முழுவதும் உன் இடுப்பில் தாலிக்கொடியாய் நான் இருப்பேன். லவ் யூ மை செல்லம்' என உருக்கமாக எழுதியிருந்தார்.

அதனை படித்த முனீஸ்வரன் கதறி அழுதது, காண்போர் கண்களில் கண்ணீரை ததும்பச் செய்தது.

வலிப்பு நோய் உள்பட, எந்த நோய்க்கும் நவீன மருத்துவத்தில் சிகிச்சை உள்ளது. எல்லா நோயாளர்களும் வாழத் தகுதியுடையவர்கள். உரிய மருத்துவ விழிப்புணர்வை மக்களுக்குக் கொடுப்போம், உயிர்களைக் காப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism