Published:Updated:

``என் மகனின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்!" மலேசியாவில் பலியான இன்ஜினீயரின் தாய் கோரிக்கை!

 இன்ஜினீயர் கேசவன்
இன்ஜினீயர் கேசவன்

கடந்த 2019 -ம் ஆண்டு மலேசியா சென்றிருக்கிறார். இன்ஜினீயரிங் படித்த கேசவன் மலேசியாவில் கூலித்தொழில் செய்துவந்தார்.

வேதாரண்யம் தாலுகா, கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் இரண்டாவது மகன் கேசவன் (வயது 30). இவர் பொறியியல் பட்டதாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு சிங்கப்பூர் செல்வதற்காக மதுரை அருகேயுள்ள அருப்புக்கோட்டையில் வசிக்கும் நபரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்தார். அதன் பிறகு கடனை அடைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு மலேசியா சென்றிருக்கிறார். இன்ஜினீயரிங் படித்த கேசவன் மலேசியாவில் கூலித்தொழில் செய்துவந்தார்.

கேசவன்
கேசவன்

கடந்த 21-ம் தேதி மலேசியாவிலுள்ள சைபர்ஜெயா என்ற இடத்தில் சாக்கடைக் கழிவுநீர் வாய்காலில் 12 அடி ஆழத்தில் கேபிள் புதைப்பதற்காக கேசவன் இறங்கியிருக்கிறார். அப்போது விஷவாயு தாக்கி கேசவன் இறந்துவிட்டதாக மலேசியாவிலிருந்து அவருடைய குடும்பத்தினருக்குத் தகவல் வந்தது. இதையொட்டி கடந்த 10 நாள்களாக மலேசியாவிலிருந்து கேசவனின் உடலைக் கொண்டுவருவதற்கு அவரின் குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இதுவரை கேசவனின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர முடியவில்லை.

இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜிடம், இறந்த மகனின் உடலை மீட்டுத் தரக் கோரி கேசவனின் தாயார் மனு அளித்திருக்கிறார். கேசவன் தாய் பார்வதியிடம் பேசினோம்.

ராமேஸ்வரம்: `சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தாருங்கள்!’ - குடும்பத்தினர் கோரிக்கை
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் கோரிக்கை
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் கோரிக்கை

``என் மகன் கடனை அடைப்பதற்காக மலேசியா சென்று ரெண்டு வருஷம் ஆகுது. ஆனா, கடனை அடைக்க முடியலை. அதற்குள் கேபிள் புதைக்கும்போது விஷவாயு தாக்கி செத்துப்போயிட்டதா சேதி சொல்றாங்க. இதுவரை என் மகனின் உடலைக் கொண்டுவர எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வி அடைஞ்சிட்டுது. எனவே எனது மகனின் உடலை மீட்டுத்தர உடனடியா மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் கண்ணீருடன்!

அடுத்த கட்டுரைக்கு