Published:Updated:

சுங்குடி சேலைக்கு உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி; போராடத் தயாராகும் நெசவாளர்கள்!

மதுரை சுங்குடி சேலைகள்
News
மதுரை சுங்குடி சேலைகள்

முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017-ல் 5 சதவிகித வரி விதித்தது ஒன்றிய அரசு. தற்பொழுது 12 சதவிகிதமாக உயர்த்தி ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் உலகம் முழுவதும் பிரபலமானது. அதனால்தான் அதற்கு மத்திய அரசால் 2005-ல் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இச்சேலைகளுக்கான ஜி.எஸ்.டியை 12 சதவிகிதமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதால் இவற்றை உற்பத்தி செய்யும் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை சுங்குடி சேலைகள்
மதுரை சுங்குடி சேலைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், ``மதுரையின் அடையாளங்களில் சுங்குடி சேலைகளுக்குத் தனித்த இடமுள்ளது. முக்கியமாக மொழிச் சிறுபான்மையினரான சௌராஷ்டிரா சமூக மக்கள், பாரம்பர்யமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கை கட்டு வடிவமைப்பு, மெழுகு பிரின்ட் வடிவமைப்பு, ஸ்கீரின் பிரின்ட் வடிவமைப்பு, சாயமிடுதல், சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளன. 10,000 குடும்பங்கள் இத்தொழிலை நம்பியுள்ளன.

மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்திய சு.வெங்கடேசன்
மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்திய சு.வெங்கடேசன்

அடித்தட்டு மக்கள் விரும்பும் உடையான சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில் 1995-ல் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கபட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு 2005-ல் புவிசார் குறியீடு வழங்கி ஒன்றிய அரசு கெளரவித்துள்ளது. இத்தகு பெருமை வாய்ந்த சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில், ஒன்றிய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிப்பிற்கு உள்ளாக உள்ளது.

முற்றிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017-ல் 5 சதவிகித வரி விதித்தது ஒன்றிய அரசு. தற்பொழுது 12 சதவிகிதமாக உயர்த்தி, அது ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.`முதலீடு செய்யுங்கள், லாபத்தைப் பங்கிட்டு கொள்ளலாம்!'- விவசாயம் செய்வதாகக் கூறி கோடிக் கணக்கில் மோசடி

சு.வெங்கடேசன்.எம்.இ
சு.வெங்கடேசன்.எம்.இ

எளிய மக்களை பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன்.

மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் நடத்தத் தயாராகி வருகிறார்கள் சுங்குடி சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள்.