Published:Updated:

`எந்த டெண்டரும் நடக்காது!' அதிமுக கவுன்சிலர்களை திமுக மிரட்டுவதாக மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

'தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்த டெண்டரும் நடைபெறவிட மாட்டோம்' என்று எங்கள் கட்சி கவுன்சிலர்களை மிரட்டுகின்றனர்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்துக்குட்பட்ட 8-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் இருந்தவர், அ.தி.மு.க-வை சேர்ந்த தானேஷ் என்கிற முத்துக்குமார். இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். சமீபத்தில் நடைபெற்ற அந்த வார்டுக்கான இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் நின்ற கண்ணையன் வென்றார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல், இன்று (22.10.2021) நடைபெறுகிறது. அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட திட்ட இயக்குநர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலர் எனப் பலரிடமும் கோரிக்கை மனுவை நேற்றைய தினம் அளித்திருக்கிறார்.

அந்த மனுவில்,

அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி: முறைகேடு குற்றச்சாட்டுகளும் பதில்களும்!
மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

`22.10.2021 நடைபெறவிருக்கும் கரூர் மாவட்ட ஊராட்சி, துணைத் தலைவர் தேர்தல் சம்பந்தமாக, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திட்ட இயக்குநர் அவர்களிடமிருந்து கடந்த 13.10.2021 தேதியிட்ட கடிதத்தில் தேர்தல் 22.10.2021 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும், இந்தப் பதவி ஆதிதிராவிடர் இனத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் . ஆனால் அதன் பிறகு, கடந்த 20.10.2021 அன்று அனுப்பிய கடிதத்தில், தேர்தல் 22.10.2021 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும் எனவும், இதில் பொதுப்பிரிவினர் போட்டியிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு கடிதங்களுக்கும் முரண்பாடு இருக்கிறது. எங்களது அ.தி.மு.க கட்சியைச் சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் ஏழு பேர், கூட்டணியுடன் சேர்த்தால் எட்டு கவுன்சிலர்கள் என பலமாக இருக்கின்றனர். ஆனால், தி.மு.க-வில் நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனால், தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள், `அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்தவர்கள் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்த டெண்டரும் நடைபெறவிட மாட்டோம்' என்று எங்கள் கட்சி கவுன்சிலர்களை மிரட்டுகின்றனர். இதையும் மீறி, அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டாலும், தி.மு.க வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுவோம் எனவும் மிரட்டுகின்றனர். இந்தச் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்தத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு