Published:Updated:

"கவுன்சிலர்களை கேஸ் பயம் காட்டி திமுக-வுக்கு இழுக்கப் பார்க்கிறாங்க" - பொங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆறு மாவட்டக் கவுன்சிலர்களோடு எம்.ஆர்.விஜயபாஸ்கர்

'கரூர் அதிமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிமுக கவுன்சிலரை மிரட்டி திமுக-வுக்கு இழுக்கப் பார்க்கிறாங்க' என்று ஆட்சியர், ஏ.டி.எஸ்-பியிடம் மனு வழங்கிய பிறகு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

"கவுன்சிலர்களை கேஸ் பயம் காட்டி திமுக-வுக்கு இழுக்கப் பார்க்கிறாங்க" - பொங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

'கரூர் அதிமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிமுக கவுன்சிலரை மிரட்டி திமுக-வுக்கு இழுக்கப் பார்க்கிறாங்க' என்று ஆட்சியர், ஏ.டி.எஸ்-பியிடம் மனு வழங்கிய பிறகு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

Published:Updated:
ஆறு மாவட்டக் கவுன்சிலர்களோடு எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அதோடு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆறு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களையும் அழைத்து வந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களையும், தி.மு.க-வைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து, அவர்களை மிரட்டியும், பொய் கேஸ் பயம் காட்டியும் தி.மு.க-வில் இணைத்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் ஐந்து முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நடைபெறவிருக்கும் துணைத் தலைவர் தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கில், கவுன்சிலர்கள், அவர்களது உறவினர்கள் ஆகியோர்மீது வழக்கு தொடர்வது, மிரட்டுவது போன்ற செயல்களில் தி.மு.க-வினர் ஈடுபட்டுவருகிறார்கள். பழைய கேஸில், முடிந்துபோன கேஸில் போலீஸார் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவருக்கு சம்மன் கொடுத்தாங்க. அந்த சம்மன்ல அதிகாரி கையெழுத்து போட்ட தேதி 6. ஆனால், போலீஸ் சம்மன் கொடுக்க வந்தது இன்னைக்கு 9 மணிக்கு. விசாரணை பத்து மணிக்கு. அதேபோல், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலரை கடத்திவைத்திருப்பதாகச் சிலர் புகார் அளித்துள்ளனர். அவர்களை யாரும் கடத்தவில்லை.

அவர்களை நேரில் அழைத்து வந்து விளக்கம் தெரிவிப்பதற்காகவும், அவர்களை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி-யிடம் நேரில் காட்டி, அது சம்பந்தமாக மனு அளிக்கவும் வந்திருக்கிறேன். அவர்களை கடத்திவைத்திருப்பதாகக் கூறி எனது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். அதைவைத்து என்னைக் கைதுசெய்ய வைக்கவும் தி.மு.க-வினர் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். தேர்தலில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் பங்குபெறுவார்கள். எனவே, அ.தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாவட்டக் காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அ.தி.மு.க-வுக்கு ஆறு, தி.மு.க-வுக்கு ஆறு சமமா இருக்கு. இரண்டு கட்சிகளுக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை சமமாக இருப்பதால், குலுக்கல் முறையில் தேர்தல் முடிவை அறிவிக்கவைக்கட்டும்.

காவல்துறையில் மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
காவல்துறையில் மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க-வுக்கு வந்தாலும் சரி, தி.மு.க-வுக்கு வந்தாலும் சரிதான். ஆனால், சர்வாதிகார முறையில் ஒவ்வொருவரையும் மிரட்டி தி.மு.க-வுக்குக் கொண்டுபோகப் பார்க்க்குறாங்க. இதுவரை, அ.தி.மு.க-வுல ஒன்றிய சேர்மன்கள் இருந்தாங்க. இப்போ அதுல நாலு பேர் இல்லை. எல்லாத்தையும் மிரட்டி தி.மு.க-வுக்கு கொண்டுபோய்க்கிட்டு இருக்காங்க. தோகைமலை யூனியல்ல அவங்க மிரட்டனதுல எட்டு கவுன்சிலர்கள் தி.மு.க-வுக்குப் போயிட்டாங்க. இப்ப நாலு பேர்தான் அ.தி.மு.க-வுல இருக்காங்க. கரூர்ல தி.மு.க அராஜகம் நடந்துகிட்டு இருக்கு. அதிகாரம் இருக்குங்கிற போதையில அளவுக்கு மேல ஆடிக்கிட்டு இருக்காங்க. இது நிரந்தரம்னு நினைச்சு ஆடிக்கிட்டு இருக்காங்க. இது நிரந்தரம் இல்லை. அரசியல்ல ஏற்றத்தாழ்வு வரும். இதெல்லாம் தெரியாமல் ஒருசிலர் நடந்துக்கிட்டு இருக்காங்க. இதுக்கு மேலயும் தேர்தல் நியாயமா நடக்கலைன்னா, நாங்க சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம்" என்றார்.