Published:Updated:

கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியில் எம்.எஸ்ஸி மாணவி..!

மோனிகா எம்.எஸ்ஸி
News
மோனிகா எம்.எஸ்ஸி

கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணிக்கு பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவுப் பணியிடங்கள் (நிரந்தரப் பணி) காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது.

துப்புரவுப் பணி பட்டதாரிகள்
துப்புரவுப் பணி பட்டதாரிகள்

அப்போதுதான், பி.இ, பி.டெக், பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளும் இந்தப் பணிக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்பதுதான் இந்தப் பணிக்காக அறிவிக்கப்பட்டிருந்த தகுதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனிடையே, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு, பணிநியமன ஆணையை வழங்கினார்.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், எம்.எஸ்ஸி படித்து வரும் மோனிகா என்ற மாணவிக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்ஸி படித்த மாணவி துப்புரவுப் பணியில் சேர்ந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

துப்புரவுப் பணி பட்டதாரிகள்
துப்புரவுப் பணி பட்டதாரிகள்

`வேலை இல்லா திண்டாட்டத்தின் கோர முகம்... நாட்டின் பொருளாதாரத்தின் அவலம்’ என்று ஒரு தரப்பினரும், `செய்யும் தொழிலே தெய்வம். எல்லோரும் எல்லாப் பணியும் செய்ய வேண்டும்’ என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

மோனிகா மட்டுமல்ல, பி.எஸ்ஸி பட்டதாரி, பொறியியல் பட்டதாரி என்று பல பட்டதாரிகள் துப்புரவுப் பணிக்கான ஆணையைப் பெற்றுள்ளனர். கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதன் ஒரு பகுதியாகத்தான் துப்புரவுப் பணிக்கு அறிவிப்பு வெளியானது.

பட்டதாரி
பட்டதாரி

மேலும், இந்தப் பணிக்கு பட்டதாரிகள் போட்டியிட்டதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருக்கிறது. துப்புரவுப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.20,000 முதல் 25,000 வரை வழங்கப்படும்.

எந்தப் பட்டதாரியாக இருந்தாலும், படிப்பை முடித்தவுடன் சொந்த ஊரில் இவ்வளவு சம்பளத்துக்கு வேலை கிடைப்பது கஷ்டம்தான். அதனால், இந்த வேலை கிடைத்ததில் பட்டதாரிகளுக்கு டபுள் ஹேப்பி. கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த மோனிகாவுக்கும் இந்தப் பணி கிடைத்தில் மிகுந்த மகிழ்ச்சியாம்.

மோனிகா
மோனிகா

``படித்தவர்கள், துப்புரவுப் பணி செய்யக் கூடாதா என்ன..? நாங்கள் எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாகச் செய்வோம்” என்று கூறுகிறார் மோனிகா. நாளை (திங்கள்கிழமை) மோனிகா பணியில் சேர்கிறார்.