Published:Updated:

கோவை: `வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வாருங்கள்!' - தொழில் அமைப்புகள் கோரிக்கை

வெளிமாநில தொழிலாளிகள்
வெளிமாநில தொழிலாளிகள்

தொழில்துறையை மேம்படுத்த வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொழில் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதனால், ஆகஸ்ட் மாதமும் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்கிறது. இ-பாஸ் விவகாரத்தில், `ஆதார் அல்லது ரேஷன் கார்டுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா
நெல்லை: மீண்டும் திரும்பிய வடமாநிலத் தொழிலாளர்கள்! - வேகம்காட்டும் தொழில் நிறுவனங்கள்

ஆனால், ‘பொதுப்போக்குவரத்து முடங்கிக் கிடக்கும் நிலையில், விளிம்புநிலை மக்கள் எப்படி ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல முடியும்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் இ-பாஸ் விவகாரத்தில் நிரந்தர தீர்வை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொடிசியா, இந்திய தொழில்கள் கூட்டடைப்பு உள்ளிட்டோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், “வைரஸ் தொற்றுடன் வாழ பழகிவிட்டோம். இனி, இதில் இருந்து எப்படி மீள்வது என்கிற வகையில் செயல்பாடுகளை வகுத்து வருகிறோம். கடன் தொகை செலுத்தும் அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க வேண்டும்.

கோவை
கோவை

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. அதில் ரூ.1லட்சம் கோடி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதம் உள்ள தொகையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், வங்கிகளில் உள்ள விதிமுறைகளை தளர்வு செய்ய வேண்டும்.

கடன் பெறாத தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும். தொழில் நிமித்தமாக, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு நிரந்தர இ-பாஸ் வழங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் தொழில் நிறுவங்கள் செயல்பட அனுமதியளிக்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளிகள்
வெளிமாநில தொழிலாளிகள்

ஊரடங்கு தொடக்கக் காலத்தில், வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து, அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல, மீண்டும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வெளிமாநில தொழிலாளர்களை இங்கு அழைத்து வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு