Published:Updated:

மழைபிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை! - ஒரே நாளில் 5 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு நீர்மட்டம்

அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து தற்போது 119 அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

தென் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமானது, பருவமழை பொய்துவிட்டதால் பெரும் சரிவைச் சந்தித்திருந்தது. நேற்றைய அணையின் நீர் மட்டம் 114 அடி.

இந்நிலையில், இன்று காலை முதல் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால், அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து தற்போது 119.85 அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

இதனால், குடிநீர் மற்றும் பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் 300 கன அடி நீர், 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக, முல்லைப் பெரியாறு கரை ஓரம் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பருவமழை பொய்த்துவிட்டதால், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்ய முடியாமல் தவித்தனர். தற்போது அணையின் நீர் மட்டம் அதிகரித்துவருவதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.