Published:Updated:

சென்னை மெட்ரோ இசை நிகழ்ச்சியும் விவாதமும்! - நடந்தது என்ன?

மெட்ரோ ரயில் நிலையத்தில் பறை இசை
News
மெட்ரோ ரயில் நிலையத்தில் பறை இசை

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த இசை நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் கடும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது... நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்?!

சென்னை மெட்ரோவில் கடந்த சில நாள்களாக பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் நேற்று மெட்ரோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் கடும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களுக்குத் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ் கலாசாரம், பாரம்பர்யத்தைக் கொண்டாடுவதற்காகச் சென்னையிலுள்ள பல்வேறு இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்தே அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

டிசம்பர் 18-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே நேற்று ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. விம்கோ நகர் தொடங்கி சென்னையின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பறை இசை, சினிமாப் பாடல்கள் என பல்வேறு வகைப்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

மெட்ரோவில் மார்கழி இசை
மெட்ரோவில் மார்கழி இசை

நிமிர்வு கலையகம், தெரு நிலை பறையாட்டம் உள்ளிட்ட சில அமைப்புகளோடு இணைந்தே இந்த இசை நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. மார்கழியில் இசை நிகழ்ச்சி நடத்துவது தமிழர்களின் பண்பாட்டின் ஓர் அங்கம் என்பதாலேயே இதை ஏற்பாடு செய்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆலந்தூர் மெட்ரோ ரயிலில் நிலையத்தில் நேற்று இசை நிகழ்ச்சி நடத்திய சர்கம் கொயர் இசைக்குழுவினரிடம் பேசினோம். ``2019-ம் ஆண்டு முதல் மார்கழி மாதத்தில் இப்படியான இசை நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்திவருகிறோம். கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இது நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு மெட்ரோ நிர்வாகத்தினரே எங்களை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தச் சொன்னார்கள். கடந்த ஆண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்துகொண்டே பாடல்களைப் பாடினோம்.

தற்போது இன்னும் கொரோனா பரவல் தொடர்வதால் மக்களின் பாதுகாப்பு கருதி ஆலந்தூர் மெட்ரோவில் மட்டும் நிகழ்ச்சியை நடத்தினோம். மற்ற இசைக் கலைஞர்களும் அமைப்புகளும் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள். நிகழ்ச்சியை மக்கள் ரசித்து எங்களை உற்சாகப்படுத்தியதோடு, வேகமாக நகரும் இந்தக் காலகட்டத்தில் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டதாகத் தங்களின் மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்துகொண்டார்கள்” என்றனர்.

மெட்ரோவில் இசை நிகழ்ச்சி
மெட்ரோவில் இசை நிகழ்ச்சி

சென்னையில் பணிக்குச் செல்லும் பலரும் இப்போது மெட்ரோவைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். மாதத்துக்கு பல லட்சம் மக்கள் பயணிக்கும் மெட்ரோவில் இப்படியான சில கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விதிகளுக்குட்பட்டு இது போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.