Published:Updated:

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை வழங்கிய சென்னை இஸ்லாமிய தம்பதியினர்!

இஸ்லாமிய தம்பதியினர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை வழங்கிய சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை வழங்கிய சென்னை இஸ்லாமிய தம்பதியினர்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை வழங்கிய சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினர்.

Published:Updated:
இஸ்லாமிய தம்பதியினர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் பிரம்மோற்சவ விழா நடைபெறவிருக்கிறது. செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. 9 நாள்கள் நடைபெறவுள்ள இவ்விழா வரும் செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. இதையொட்டி திருப்பதி செல்லும் பக்தர்கள் பல்வேறு வகையில் திருப்பதி தேவஸ்தானத்திற்குக் காணிக்கை செலுத்திய வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினரான தொழிலதிபர் அப்துல் கனி மற்றும் சுபீனா பானு குடுபத்தினர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், தேவஸ்தானம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி ஓய்வு இல்லத்திற்கு ரூ.87 லட்சம் மதிப்புள்ள பர்னிச்சர் மற்றும் உபகரணங்களை போன்றவற்றை நன்கொடையாக வழங்கினர். மேலும், எஸ்.வி. அன்னப் பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இதற்கென 1.02 கோடி ருபாய் மதிப்பிலான காசோலையை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பெற்றுக்கொண்டார்.