Published:Updated:

நாகை: 192 ஊராட்சிகளில் முதலிடம் பிடித்த நரிமணம்! - ரூ.7.5 லட்சம் பரிசுபெற்ற முன்மாதிரி ஊராட்சி

ரூ.7.5 லட்சம் பரிசுபெற்ற முன்மாதிரி ஊராட்சி

மாவட்ட அளவில் தூய்மை மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கியமைக்காக முதலிடம் பெற்று பரிசை வென்றிருக்கிறது நரிமணம் ஊராட்சி.

நாகை: 192 ஊராட்சிகளில் முதலிடம் பிடித்த நரிமணம்! - ரூ.7.5 லட்சம் பரிசுபெற்ற முன்மாதிரி ஊராட்சி

மாவட்ட அளவில் தூய்மை மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கியமைக்காக முதலிடம் பெற்று பரிசை வென்றிருக்கிறது நரிமணம் ஊராட்சி.

Published:Updated:
ரூ.7.5 லட்சம் பரிசுபெற்ற முன்மாதிரி ஊராட்சி

நாகை மாவட்டத்தில் 2021-22 ஆண்டில் தூய்மை, சுகாதாரத்தில் சிறந்து விளங்கியமைக்காக முதலிடம் பெற்று பரிசை வென்றிருக்கிறது நரிமணம் ஊராட்சி. மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் சிறந்த ஊராட்சிக்கான அரசின் பரிசுத்தொகை ரூ.7.5 லட்சத்துக்கான காசோலையையும், பாராட்டுப் பத்திரத்தையும் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்தியிடம் வழங்கிப் பாராட்டியிருக்கிறார்.

கார்த்தி
கார்த்தி

சுமார் 1,070 வாக்காளர்களைக்கொண்ட நரிமணம் ஊராட்சியில் நாரணமங்கலம், சுள்ளங்கால் ஆகிய சிற்றூர்களும் அடங்கியிருக்கின்றன. இதில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக தேர்தலில் களமிறங்கி 153 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் பி.காம் பட்டதாரியான கார்த்தி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விருதுபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்தியிடம் பேசினோம். ``நான் பதவியேற்கும்போதே இந்த ஊராட்சியைத் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரி ஊராட்சியாகக்கொண்டு வர வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். வீடுகள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போடுவதற்கேற்ப குப்பைத்தொட்டிகள் வழங்கி, குப்பைகளை தினந்தோறும் சேகரித்து அப்புறப்படுத்துகிறோம். அனைத்துப் பகுதிகளுக்கும் புதிதாகக் குடிநீர்ப் பைப்புகள் போடப்பட்டு காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்துவருகிறோம். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் தண்ணீரை வீணடிக்காமல் நிலத்தடி நீரைப் பாதுகாக்க உறிஞ்சிக் குழி அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. 70 சதவிகிதம் புதிய சாலைகள் போடப்பட்டிருக்கின்றன.

நரிமணம் ஊராட்சி
நரிமணம் ஊராட்சி

குடிசை இல்லாத வீடுகள்கொண்ட ஊராட்சி என்ற பெயரெடுப்பதற்கு இதுவரை 122 கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தரப்பட்டிருக்கின்றன. இன்னும் எஞ்சியிருப்பவை வெறும் 40 தான். அவையும் மாற்றப்படும். பசுமை பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பொது இடங்களில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பொது இடங்களில் மலம் கழிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் மூலம் பிரசாரம் செய்திருக்கிறோம். மகளிர் மேம்பாட்டுக்கு இலவச தையல் பயிற்சி, காளான் வளர்ப்பு போன்ற சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அனைத்துக் குளங்களிலும் படித்துறைகள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசப் பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.192 ஊராட்சிகள் உள்ள இந்த மாவட்டத்தில் தூய்மை மற்றும் பராமரிப்புக்காக முதலிடம் பெற்று பரிசு பெற்றிருப்பது பெரிய ஊக்கத்தைத் தந்திருக்கிறது. `இந்த ஊராட்சியில் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். குடிசையில்லாத வீடுகள் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்' என்பதெல்லாம் என்னுடைய கனவுகள். அவை நிறைவேறப் பாடுபடுவேன்" என்றார் உறுதியாக!