Published:Updated:

`அந்த நொடி என் உசுரை பத்தி நெனைக்கல!' - குளத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய வீரப்பெண் கல்யாணி

காப்பாற்றப்பட்ட குழந்தை ஹரி ( gafoor m k )

''குழந்தையோட அவங்க மேல ஏறி வந்தப்போ எங்களுக்கெல்லாம் சாமியா தெரிஞ்சாங்க. சுத்தி நின்ன எல்லாரையும்போல, யாராச்சும் ஒரு ஆம்பள வரணுமே குழந்தையைக் காப்பாத்தனு அவங்க பாதம் நிக்கல. அப்படி அவங்களும் நினைச்சிருந்தா, அந்தக் குழந்தையோட நிலைமை என்னவாகியிருக்கும்னு நெனைக்கிறப்போ...''

`அந்த நொடி என் உசுரை பத்தி நெனைக்கல!' - குளத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய வீரப்பெண் கல்யாணி

''குழந்தையோட அவங்க மேல ஏறி வந்தப்போ எங்களுக்கெல்லாம் சாமியா தெரிஞ்சாங்க. சுத்தி நின்ன எல்லாரையும்போல, யாராச்சும் ஒரு ஆம்பள வரணுமே குழந்தையைக் காப்பாத்தனு அவங்க பாதம் நிக்கல. அப்படி அவங்களும் நினைச்சிருந்தா, அந்தக் குழந்தையோட நிலைமை என்னவாகியிருக்கும்னு நெனைக்கிறப்போ...''

Published:Updated:
காப்பாற்றப்பட்ட குழந்தை ஹரி ( gafoor m k )

சூப்பர் ஹீரோக்கள் கதைகளே புகப்பட்ட நமக்கு, நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கும் சூப்பர் உமன்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஊரில் உள்ள குளத்தில் குழந்தை ஒன்று மூழ்கிவிட, எதைப் பற்றியும் யோசிக்காமல் மின்னலென ஓடிச் சென்று நீரில் பாய்ந்து, குழந்தையைக் காப்பாற்றி கரை ஏறி வந்த கல்யாணியைப் பார்த்தபோது, சேலை கட்டிய அந்த சூப்பர் உமனை பார்த்து ஊரே வியந்து, சிலிர்த்து நின்ற தருணம்... அற்புதம்.

குழந்தையைக் காப்பாற்றிய கல்யாணி
குழந்தையைக் காப்பாற்றிய கல்யாணி

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அருகே உள்ள பொன்வெளி கிராமத்தில் வசிக்கிறார் கல்யாணி. தலையில் இடிக்கும் அளவுக்குத் தாழ்வான கூரை வீடு. ஒரு பக்கம் வீட்டின் சுவர் இடிந்து, துணி மற்றும் பழைய பேனர்கள் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது கல்யாணியின் வீடு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``காலையில கோயிலுக்குப் போனேன் சார். கோயில் பூட்டிக் கிடந்தது. திரும்பி வந்துவிட்டேன். நேத்து நடந்ததை நினைச்சா இப்பவும் எனக்கு ஒரே படபடப்பா இருக்கு" என்றார் பெருமூச்சுடன்.

காப்பாற்றப்பட்ட குழந்தை ஹரி
காப்பாற்றப்பட்ட குழந்தை ஹரி
Dart Media

சம்பவம் நடந்த அன்று, குளத்துக்கு அருகிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்க, குழந்தைகளும் பெரியவர்களும் ஊர்க் குளத்தை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓடினார்கள். அவர்கள் சத்தம் போட்டதில் இருந்து, அந்தக் குளத்தில் ஒரு குழந்தை விழுந்துவிட்டது என்பதைத் தூரத்தில் இருந்தவர்களாலும் அறிந்துகொள்ள முடிந்தது. குளத்தைச் சுற்றி பலரும் நின்று கொண்டிருக்க, யோசிக்காமல் மின்னலெனப் பாய்ந்து குளத்தில் குதித்தார் கல்யாணி. கரையில் நின்றவர்களின் ஓலம் அதிகமாக, சரசரவென நீந்திச் சென்று குழந்தையைத் தூக்கி ஒரு கையில் பிடித்தபடியே கரைக்கு நீந்தி வந்தார். கரையில் நின்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து அவர் கரைக்கு வர கைகொடுத்து, குழந்தையையும் கல்யாணியையும் இழுத்துத் தூக்கினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுற்றியிருந்தவர்கள், குழந்தையின் தாயைத் திட்டியபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினார்கள். ஏற்கெனவே ஒருமுறை அந்தக் குளத்தில் ஒரு குழந்தை விழுந்து இறந்துபோயுள்ளது என்பதால், கிராமமே பதற்றமாக இருந்தது. இம்முறை, குழந்தை குளத்தில் விழுந்த அடுத்த சில மணித்துளிகளில் மீட்டுவிட்டதால் நல்லவேளையாகக் குழந்தை அதிகம் தண்ணீர் குடிக்கவில்லை. `நல்லபடியா புள்ள பிழைச்சுக்கிச்சு' என்ற நிம்மதிக் குரல்கள் கேட்க ஆரம்பித்ததும்தான், கிராமத்தின் இதயத்துடிப்பு இயல்புக்குத் திரும்பியது.

காப்பாற்றப்பட்ட குழந்தை ஹரி
காப்பாற்றப்பட்ட குழந்தை ஹரி
Dart Media

ஈரப்புடவையுடனும், பதற்றம் அகலாமலும் நின்றுகொண்டிருந்த கல்யாணியிடம், `சாமி மாதிரி வந்து இந்தக் குட்டி உசுர காப்பாத்திட்ட தாயி' என்று பல கரங்களும் கும்பிட்டுச் சென்றபடி இருந்தன. அன்று முழுக்க அந்தச் சூழலின் பதற்றம் அதிர்ந்துகொண்டே இருக்க, மறுநாள் சென்றோம் கல்யாணியிடம் பேச.

கிராமத்தைச் சேர்ந்த தீபா நம்மிடம், ``எப்படியும் 10, 15 அடி ஆழம் இருக்கும் சார் அந்தக் குளம். இந்தக் குளத்துக்கு தண்ணி வர்றதுக்கு வழி இருக்கு. ஆனா, வடிகால் வசதி கிடையாது. அதனால தண்ணி தேங்கிக் கிடக்கும். எல்லா குப்பை, கழிவுகளையும் அதுலதான் கொட்டுவாங்க. அதனால, குழந்தை குளத்துல விழுந்தப்போ சிலர் அதுல குதிக்கத் தயங்கி யிருக்கலாம். ஆனா, கல்யாணி எதைப் பத்தியும் யோசிக்கல, தன் உசுரக்கூட நெனைக்கல. குதிச்சு, குழந்தையோட அவங்க மேல ஏறி வந்தப்போ எங்களுக்கெல்லாம் சாமியா தெரிஞ்சாங்க. சாமிக்கு மேலயும் அவங்கள சொல்லலாம். சுத்தி நின்ன எல்லாரையும்போல, யாராச்சும் ஒரு ஆம்பள வரணுமே குழந்தையைக் காப்பாத்தனு அவங்க பாதம் நிக்கல. அப்படி அவங்களும் நினைச்சிருந்தா, அந்தக் குழந்தையோட நிலைமை என்னவாகியிருக்கும்னு நெனைக்கிறப்போவே...'' - வார்த்தைகள் நின்றுபோய்விட்டன தீபாவுக்கு.

தீபா
தீபா
Dart Media

காப்பாற்றப்பட்ட குழந்தையின் அம்மா சித்ரா, ``ஊர்க்காரங்க, சொந்தக்காரங்க எல்லாம் இன்னும் என்னைத் திட்டி முடிக்கல. என் வீட்டுக்காரர் வெளியூர்ல வேலைபார்க்கிறார். போன்ல அவரும் திட்டுனாரு. `காப்பாத்துன காவல் தெய்வத்துக்கு காலத்துக்கும் நாம கடன்பட்டிருக்கோம்'னு கண் கலங்கினாரு. இவங்க மட்டும் என் புள்ளையக் காப்பாத்தலைன்னா, என் உயிரும் சேர்ந்தே போயிருக்கும். இனி என் புள்ளைய நொடிப்பொழுதும் விடாம பத்திரமா பார்த்துக்குவேன்" என்றவர் கலங்க, அவரை சமாதானப்படுத்திவிட்டு நம்மிடம் பேசினார் கல்யாணி.

``எனக்கு ஒரு பொம்பளப் புள்ள, ஒரு ஆம்பள புள்ளனு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. வீட்டுக்காரர் பி.காம் படிச்சிருக்கார். நிறைய இடத்துல வேலைபார்த்தார். ஒண்ணும் சரிவரலைன்னு இப்போ கொத்தனார் வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். நான் ஒன்பதாவது வரை படிச்சிருக்கேன்'' என்றவர், அந்த நொடிகளை விவரித்தார்.

குழந்தை ஹரியின் அம்மா சித்ரா
குழந்தை ஹரியின் அம்மா சித்ரா
Dart media

``குழந்தை குளத்துல மூழ்கிக்கிட்டிருந்துச்சு. நாலு விரலு மட்டும் தான் வெளியே தெரிஞ்சது. எல்லாரும் சத்தம் போட்டுக்கிட்டிருக்க, நான் அப்படியே ஓடிப்போய் குதிச்சுட்டேன். குழந்தையைத் தொட்டு தூக்கிட்டாலும், கரைக்கு வர முடியல; புடவை காலுல சிக்கிக்கிட்டு காலை அசைக்க முடியல. நானும் தண்ணிக்குள்ள மூழ்கி நாலுவாய் தண்ணி குடிச்சிட்டேன். அப்போ மனசுல, நமக்கு என்ன ஆனாலும் இந்த சின்ன உசுர காப்பாத்திடணும்னுதான் இருந்துச்சு. அப்பவும் குழந்தைய மட்டும் மேலே தூக்கிக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தேன்'' என்றவர், ஒரு நினைவை பகிர்ந்துகொண்டார்.

``ஒருமுறை, என் நாத்தனார் ஊரு, புதுச்சேரிக்குப் போயிருந்தேன். என் பையனுக்கு ரெண்டு வயசு. அங்க இருந்த ஒரு குளத்துல விழுந்துட்டான். கை மட்டும் மேல தெரிஞ்சப்போ, நான் குதிச்சுப் போனேன். ஆனா, அதுக்குள்ள மூழ்கிட்டான். தண்ணிக்கு அடியில காலால துழாவி அவன கண்டுபிடிச்சு, முடியைப் பிடிச்சி மேலே இழுத்துட்டு வந்தேன். ஊர்க்காரங்க, குழந்தையைத் தூக்கி தலையில வைச்சுக்கிட்டு சுத்துனாங்க. எல்லா தண்ணியும் வாய், மூக்கு வழியே வெளியே வந்துடுச்சு. என் பிள்ளை பிழைச்சுக்கிட்டான்" என்றவர் இறுதியாகச் சொன்னார்.

கல்யாணி
கல்யாணி
Dart Media

''நம்மளக் காப்பாத்த யாராச்சும் வரணும், ஆம்பளைங்க வரணும்னு பொண்ணுங்க எதிர்பார்க்கக் கூடாது. நாம போகணும் மத்தவங்களைக் காப்பாத்த. நமக்கும் அதே ரெண்டு கையி, காலுதானே கடவுள் கொடுத்திருக்காரு..?"

- நிலா அப்பா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism