Published:Updated:

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த கணேஷ்குமாரை பேட்டியெடுத்த மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்!

கணேஷ்குமாரிடம் நேர்காணல் நடத்தும் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்
கணேஷ்குமாரிடம் நேர்காணல் நடத்தும் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்

நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிட்டு இருந்த சமயத்துல ஐ.ஏ.எஸ் வெற்றிப்பெற்றவங்ககிட்ட பேட்டி எடுத்திருக்கேன். ஐ.ஏ.எஸ் வெற்றிபெற்ற பிறகு எடுக்கிற முதல் இன்டர்வியூ இதுதான் என்றார் ஆஷாஅஜித் ஐ.ஏ.எஸ்.

நாகர்கோவிலில் வசிக்கும் கணேஷ்குமார் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 7-ம் இடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள கணேஷ்குமாருக்கு, பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருக்கும் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ், போனில் கணேஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவரை நேரில் அழைத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது குறித்து நேர்காணல் நடத்தினார். அதை அப்படியே வீடியோவாக எடுத்து நாகர்கோவில் மாநகராட்சி ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த நேர்காணல் உதவியாக இருக்கும் எனக் கூறிய ஆஷா அஜித்துக்கு இந்த நேர்காணல் புதிது அல்ல. அவர் கேரள அரசின் கல்வி தொலைகாட்சியான விக்டரி சானலில் இதற்கு முன்பு பணி செய்துள்ளார். அப்போது மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தியிருக்கிறார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டா திவ்யா ஐயர் ஐ.ஏ.எஸ் ஆன சமயத்திலும் அவரை விக்டரி தொலைகாட்சியில் நேர்காணல் நடத்தினார். அதற்கு அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றதாக அதே விக்டரி தொலைக்காட்சியில் ஆஷா அஜித்தின் நேர்காணல் ஒளிபரப்பானது. அந்த நேர்காணலின்போது திவ்யா ஐயரும் சென்றிருந்தார்.

கணேஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்
கணேஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன பிறகு ஆஷா அஜித் நடத்திய முதல் நேர்காணல் இதுதான். நேர்காணல் நடத்தியது பற்றி ஆஷா அஜித்திடம் பேசினோம்.``நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிட்டு இருந்த சமயத்துல ஐ.ஏ.எஸ் வெற்றி பெற்றவங்ககிட்ட பேட்டி எடுத்திருக்கேன். ஐ.ஏ.எஸ் தேர்ச்சிபெற்ற சுமார் நான்கு பேர்கிட்ட பேட்டி எடுத்திருக்கிறேன். நான் ஐ.ஏ.எஸ் வெற்றிபெற்ற பிறகு எடுக்கிற முதல் இன்டர்வியூ இதுதான். நம்ம மாவட்டத்துல ஒருத்தர் படிச்சு வெற்றிபெற்றதுனால போன்ல வாழ்த்து தெரிவித்தேன். அப்புறமா அவரை நேர்காணலுக்காக அலுவலகத்துக்கு அழைத்தேன்.

வரும் அக்டோபர் 4-ம் தேதி சிவில் சர்வீஸ் எக்ஸாம் இருக்கு. எப்படியும் தமிழ்நாட்டுல நிறைய பேரு சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருப்பாங்க. லாக்டெளன் காரணமா கிளாஸ் அட்டன்ட் பண்ண முடியாமத்தானே இருக்காங்க. இந்த சமயத்துல நாம ஒரு இன்டர்வியூ கொடுத்தா பயனுள்ளதா இருக்கும்னு நினைச்சேன். நான் முன்னாடி இன்டர்வியூ எடுத்ததுக்கும் ஐ.ஏ.எஸ் ஆனபிறகு நான் இப்போ எடுத்த பேட்டிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஐ.ஏ.எஸ் ஆகுறதுக்கு முன்னாடி எடுத்த பேட்டியில, தேர்வுக்கு தயாராவது பற்றிய கேள்விகள்தான் கேட்போம். நிறைய விஷயங்கள் நமக்கு தெரியாது. அதனால, அவங்க சொல்லுறது நமக்கு மோட்டிவேஷனா இருக்கும்.

ஆஷா அஜித் நடத்திய நேர்காணல்
ஆஷா அஜித் நடத்திய நேர்காணல்

இப்போ நடத்தின நேர்காணல்ல கேள்வி கேட்டு அவங்க சொல்லுற பதிலையும் நான் விரிவா சொல்ல முடியும். அந்தக் கருத்தோட கூடுதலா சில கருத்துகளையும் என்னால சொல்ல முடிஞ்சது. இதுபோல இதுக்குக்கு முன்னாடி யாராவது இன்டர்வியூ நடத்தினாங்களான்னு சொல்ல தெரியல. இந்த நேர்காணலை ஃபேஸ்புக் பக்கத்துல வீடியோ போட்டதுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்னு நான் நினைக்கல" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு