Published:Updated:

சேறும் சகதியுமாக இருந்த சாலை - ரூ.10.5 லட்சம் சொந்தச்செலவில் சாலை அமைத்த இளைஞர்; குவியும் பாராட்டு!

சாலை அமைப்பதற்கு முன்பும் பின்பும்

விழுப்புரத்தில் தன்னுடைய கிராமத்தில் இருந்த சாலையின் மோசமான நிலையைக் கண்டு வருந்திய இளைஞர் ஒருவர், அரசின் அனுமதியோடு சொந்தச் செலவில் சிமென்ட் சாலை அமைத்து அசத்தியிருக்கிறார்.

சேறும் சகதியுமாக இருந்த சாலை - ரூ.10.5 லட்சம் சொந்தச்செலவில் சாலை அமைத்த இளைஞர்; குவியும் பாராட்டு!

விழுப்புரத்தில் தன்னுடைய கிராமத்தில் இருந்த சாலையின் மோசமான நிலையைக் கண்டு வருந்திய இளைஞர் ஒருவர், அரசின் அனுமதியோடு சொந்தச் செலவில் சிமென்ட் சாலை அமைத்து அசத்தியிருக்கிறார்.

Published:Updated:
சாலை அமைப்பதற்கு முன்பும் பின்பும்
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகில், தங்களுடைய தனித்துவமான செயல்களினால் நம்மை ஒருகணம் திரும்பிப் பார்க்க வைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய கிராமத்திற்கு சொந்தச் செலவில் சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய இளைய மகன் சந்திரசேகர். பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையிலுள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். கொரோனாப் பெருந்தொற்று பரவிய சமயத்தின் போது சொந்த கிராமத்திற்கு வந்தவர், தன்னுடைய வீட்டிற்குச் செல்லும் சாலையின் நிலையைக் கண்டு வருந்தியுள்ளார்.

நல்லாவூர் சந்திரசேகர்
நல்லாவூர் சந்திரசேகர்

ஒரு மழை பெய்தாலே சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் அந்தச் சாலையின் நிலையை மாற்ற வேண்டும் என எண்ணிய சந்திரசேகர், தன்னுடைய சொந்தச் செலவிலேயே அதை மாற்றி அமைத்து அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக சந்திரசேகரிடம் பேசினோம். "எங்கள் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் நீண்ட காலமாக சாலை அமைக்கப்படாமல் இருந்துவந்தது. இதனால், மழை நேரத்தில் நடக்கவே முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலைக்கு அந்தத் தெரு வந்துவிடும். அதை மாற்ற நினைத்த நான், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகினேன். அதிகாரிகளோ, 'தற்சமயம் சாலை அமைப்பதற்கு நிதி இல்லை' என்றார்கள். எனவே, என்னுடைய சொந்தச் செலவில் அந்தச் சாலையை அமைத்துக்கொள்கிறேன் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்கள். அதன்படி மாவட்ட ஆட்சியர் மோகன் சாரிடம் அனுமதி பெற்றேன். பின்னர் அதிகாரிகள் நேரில் வந்து அளவீடு செய்து, திட்ட வரையறையைக் கொடுத்தார்கள். 10.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 அடி அகலம், 270 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலையை அமைத்தேன். ஆரம்பத்தில், "ஏன் உனக்கு வேண்டாத வேலை?" எனச் சொன்ன என் அம்மா, பின்னர் ஏதும் சொல்லவில்லை.

பதாகை
பதாகை

எனக்கு, வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காகச் சேர்த்து வைத்திருந்த தொகையிலிருந்துதான் இந்தச் சாலையை அமைத்துள்ளேன். என்னால் திருமணச் செலவைப் பார்த்துக்கொள்ள முடியும். ஈஸ்வரன் கோயில் தெருவிற்குச் சாலை அமைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றார் புன்னகையோடு.

பாராட்டுகள் சந்திரசேகர்!