Published:Updated:

கைவிரித்த தனியார் மருத்துவமனை; 525 கிராம் எடை கொண்ட குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

குழந்தையோடு ஆட்சியர்

ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னும், குழந்தைகளின் உடல்நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை. அதோடு, சிகிச்சைக்காகப் பெற்றோர் பல லட்சம் செலவு செய்துள்ளனர். கடைசியில், அந்த மருத்துவமனை நிர்வாகம், `எங்களால் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை' என்று சொல்லியிருக்கிறது.

கைவிரித்த தனியார் மருத்துவமனை; 525 கிராம் எடை கொண்ட குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னும், குழந்தைகளின் உடல்நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை. அதோடு, சிகிச்சைக்காகப் பெற்றோர் பல லட்சம் செலவு செய்துள்ளனர். கடைசியில், அந்த மருத்துவமனை நிர்வாகம், `எங்களால் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை' என்று சொல்லியிருக்கிறது.

Published:Updated:
குழந்தையோடு ஆட்சியர்

எடை குறைவான இரட்டைக் குழந்தைகளை, லட்சங்களில் செலவழித்தும் தனியார் மருத்துவமனை காப்பாற்ற முடியாது எனக் கூறி கைவிரிக்க, அதில் ஒரு குழந்தையை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி, அந்தப் பெற்றோரை நெகிழ வைத்திருக்கிறார்கள். மேலும், தொடர்ச்சியாக இதுபோல எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளைத் தனி கவனம் செலுத்திக் காப்பாற்றிவரும் அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

குழந்தையோடு ஆட்சியர்
குழந்தையோடு ஆட்சியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாமக்கல் மாவட்டம், கணேசபுரத்தைச் சேர்ந்த சாதனா - விக்னேஷ் தம்பதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சேலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. மிகவும் எடை குறைவான மற்றும் அதீத குறைப்பிரசவக் குறைபாடுகளோடு பிறந்த அந்தக் குழந்தைகளை, அதே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகச் சொல்லப்படுகிறது. சுமார் ஒரு மாத அளவில் அங்கு சிகிச்சை மேற்கொண்டும், குழந்தைகளின் உடல் நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சைக்காக அந்தப் பெற்றோர் பல லட்சம் செலவு செய்துள்ளனர்.

கடைசியில், அந்த மருத்துவமனை நிர்வாகம், `எங்களால் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை' என்று சொல்லியிருக்கிறது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்தப் பெற்றோர், தங்கள் குழந்தைகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்குதான், ஒரு குழந்தையைக் காப்பாற்றி, அந்தப் பெற்றோருக்கு மருத்துவர்கள் புது நம்பிக்கை கொடுத்திருக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெற்றோரிடம் பேசினோம். ``சேலம் தனியார் மருத்துவமனையில, எங்க குழந்தைகளைக் காப்பாற்ற முடியலைனு கைவிரிச்சுட்டாங்க. அதனால, இரட்டைக் குழந்தைகளை வென்டிலேஷன் வசதி கொண்ட சிறப்பு அவசர சிகிச்சை ஊர்தியில அழைச்சுக்கிட்டு வந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சிகிச்சைக்காக சேர்த்தோம். ஆனா, தனியார் மருத்துவமனையில காலம் கடத்தியதால, இங்க ஓரிரு நாட்கள்லேயே இரட்டைக் குழந்தைகள்ல 720 கிராம் எடையில இருந்த ஆண் குழந்தை, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துடுச்சு. நாங்க அடைஞ்ச மனவேதனைக்கு அளவே இல்லை. ஆனா, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சாந்தா அருள்மொழி, குழந்தைகள் துறை தலைவர் சுரேஷ்கண்ணன், பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர் கண்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள், இன்னொரு குழந்தையைத் தொடர் சிகிச்சை, கண்காணிப்புனு அரும்பாடுபட்டு காப்பாத்திட்டாங்க.

அந்தக் குழந்தையோடு ஆட்சியர்
அந்தக் குழந்தையோடு ஆட்சியர்

தொடர்ந்து 80 நாள்களுக்கும் மேல தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் வச்சு குழந்தைக்கு சிகிச்சை கொடுத்தாங்க. முன்னாடி 525 கிராம் எடையில இருந்த எங்க பெண் குழந்தை, இப்போ 1.4 கிலோவாக எடை அதிகமாகி ஆரோக்கியமா இருக்கு. இப்போதான் எங்களுக்கு போன உசுரு திரும்பி வந்திருக்கு. ஒரு குழந்தை இறந்த துக்கத்தை, இந்தக் குழந்தை நல்லா இருக்கேங்கிற மன ஆறுதல் மூலம் மறக்க நினைக்கிறோம். எங்க சாமியைக் காப்பாத்திக் கொடுத்த மருத்துவர்களை காலத்துக்கும் மறக்க மாட்டோம்" என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்துப் பேசிய குழந்தைகள் நல மருத்துவர்கள், ``இவ்வளவு எடை குறைவான, மேலும் இவ்வளவு குறைமாதக் குழந்தைகளைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். இதுபோன்ற குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் வளர்ச்சிக் குறைபாடு, இருதயக் குறைபாடு, சரியாக பால் குடிக்க முடியாமல் அவதிப்படுவது, டியூப் வழியாக கொடுக்கும் பாலையும் சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை, எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் தீவிரமான கிருமித்தொற்று ஏற்படுதல், அதீத ரத்தசோகை, திடீரென்று மூச்சு நின்று போவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இத்தனை சவால்களையும் தாண்டித்தான் அந்தப் பெண் குழந்தையின் பெற்றோரின் துணையுடன் குழந்தையைக் காப்பாற்றி உள்ளோம். அந்த ஆண் குழந்தையையும் விரைவாக சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தால், ஒருவேளை காப்பாற்றியிருக்க முடியும்.

மிகவும் குறைமாத பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பின்னாளில் மூளை வளர்ச்சிக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, காது கேட்பதில் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அந்தக் குழந்தையோடு ஆட்சியர்
அந்தக் குழந்தையோடு ஆட்சியர்

இந்தக் குழந்தைக்கு அதற்கான பரிசோதனைகள் செய்தபோது, பார்வைக் குறைபாடு அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப தொடர் கண்காணிப்பு வழிமுறைகளையும், வளர்ப்பு ஊக்குவிப்பு நெறிமுறைகளையும் பெற்றோர்கள் மேற்கொள்ள வழிவகை செய்துள்ளோம்.

இதேபோல், பாலக்குறிச்சியைச் சேர்ந்த சௌந்தர்யா, ஜீவானந்தம் தம்பதியின் குழந்தையையும் காப்பாற்றியுள்ளோம். கருவுற்று 29 வாரங்களிலேயே சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நுரையீரல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்ததால் தொடர்ந்து 25 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், தொடர் கண்காணிப்புக்குப் பிறகு அந்தக் குழந்தை தற்போது 1,180 கிராம் எடையுடன் முழு ஆரோக்கியத்துடன் உள்ளது. இதேபோல் எடைகுறைவாகப் பிறந்த அந்தத் தம்பதியின் முதல் குழந்தையையும் சிகிச்சையளித்துக் காப்பாற்றியுள்ளோம்" என்றார்கள்.

இதற்கிடையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் இந்தக் குழந்தையின் சிகிச்சை குறித்து தொடர்ந்து கேட்டறிந்திருக்கிறார். குழந்தை நலமானது தெரிந்ததும், நேரடியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விசிட் அடித்து, தாயையும் சேயையும் பார்த்திருக்கிறார். அதோடு, கைவிடப்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய மாவட்டஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், ``நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில், குறை மாதத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. மாநிலத்திலேயே பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிறப்பாகச் செயல்படும் அரசு மருத்துவமனையாக, நாமக்கல் அரசு மருத்துவமனை சிறப்பிடம் பெற்றுள்ளது. அந்த வகையில், 525 கிராம் மட்டுமே பிறப்பு எடைகொண்ட குழந்தையைக் காப்பாற்றுவது நாமக்கல் அரசு மருத்துவமனை வரலாற்றில் இதுவே முதல் முறை. தற்போது இந்தக் குழந்தை 1,400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. இதன் மூலம், ஒரு புதிய மைல் கல்லை நமது மருத்துவர்கள் அடைந்துள்ளனர்.

மருத்துவர்களோடு ஆட்சியர்
மருத்துவர்களோடு ஆட்சியர்

அதேபோல், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒவ்வொரு மாதமும் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் செலவு பிடிக்கக்கூடிய சிகிச்சைகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுகின்றன. அதற்கான அதிக விலையுடைய மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகள் அரசு மருத்துவமனையிலேயே உள்ளன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism