Published:Updated:

`உடலை தனித்தனியாக வெட்டி ஆற்றில் வீசினார்!' - அண்ணிக்காக நண்பனைக் கொலை செய்த நாமக்கல் இளைஞர்

பள்ளிபாளையம் அருகே, தலை துண்டித்து தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டார்.

சடலம் வீசப்பட்ட ஆறு
சடலம் வீசப்பட்ட ஆறு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள நாட்டாகவுண்டன்புதூர் காவிரி ஆற்றில் ஆண் சடலம் சில தினங்களுக்கு முன்பு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

கைதான குமார்
கைதான குமார்

விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் குமாரபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி சின்ராஜ் என்றும் இவரைக் கொலை செய்தவர், அதே ஊரைச் சேர்ந்த இவருடைய நண்பர் குமார் என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது குடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் குமாரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தபோது, அவர் சின்ராஜைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

போலீஸாரிடம் குமார் அளித்த வாக்குமூலத்தில், ``சின்ராஜ் என் அண்ணியுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவரை 11-ம் தேதி பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலிக்குக் கூட்டிச்சென்று மது வாங்கிக் கொடுத்தேன். பின்னர், என் அண்ணியுடன் உள்ள தொடர்பை விட்டுவிடும்படி கூறினேன்.

காதல் விவகாரத்தில் தீ வைத்து இளைஞர் கொலை!- அதிர்ச்சியில் தாய் மரணம்

அவர் மறுக்கவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் நான் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினேன். பின்னர் தலையைத் தனியாக அறுத்து, உடலை ஆற்றில் வீசினேன். தலையைத் தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு அதையும் ஆற்றில் வீசினேன். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல இருந்துகொண்டேன்' எனத் தெரிவித்ததாகப் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.