Published:Updated:

பள்ளி வளாகத்தில் அத்துமீறிய நாமக்கல் ஆசிரியர்! - போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸ்

நாமக்கல் அருகே, பள்ளியில் அத்துமீறிய ஆசிரியரையும் அங்கன்வாடி பெண் ஊழியரையும் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்.

ஆசிரியர் சரவணன்
ஆசிரியர் சரவணன்

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகிலுள்ள எஸ்.உடுப்பத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்க வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே, அங்கன்வாடி மையமும் செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், கடந்த நான்கு வருடங்களாகப் பணியாற்றிவருபவர், ஆசிரியர் சரவணன். இவர், புதன்சந்தை பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கும் அதே பள்ளியில் அங்கன்வாடி மையத்தின் பொறுப்பாளர் சரஸ்வதிக்கும் (பெயர் மாற்றம்) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்
ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

கடந்த சில மாதங்களாக, ஆசிரியர் சரவணனும் சரஸ்வதியும் பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், ஊர்மக்களுடன் சேர்ந்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அவரும் புகாரைப் பெற்றுக்கொண்டு இருவரையும் எச்சரித்திருக்கிறார். ஆனால், ஆசிரியரும் அந்தப் பெண்ணும் பள்ளி வளாகத்தில் மீண்டும் தகாத முறையில் நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு, வகுப்பறையிலிருந்த ஆசிரியர் சரவணனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அதே பள்ளியில் இருக்கும் சக ஆசிரியர்களும் சரவணன் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஆசிரியரை தாக்கியதாகக் கூறி பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ், ஊர் பொதுமக்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெற்றோர் அளித்த புகாரில், பள்ளி மாணவிகளுக்கும் ஆசிரியர் சரணவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், சரவணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது, காவல்துறை.