Published:Updated:

கணவர் மரணம்: மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெண்; தவறான முடிவால் மக்கள் அதிர்ச்சி!

கீதா

கொரோனா பாதிப்பால் கணவர் உயிரிழந்த துக்கத்தில், தன் மகனோடு சேர்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள தவறான முடிவு, உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கணவர் மரணம்: மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெண்; தவறான முடிவால் மக்கள் அதிர்ச்சி!

கொரோனா பாதிப்பால் கணவர் உயிரிழந்த துக்கத்தில், தன் மகனோடு சேர்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள தவறான முடிவு, உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கீதா

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கொண்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி கீதா (22). இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதியின் மகன் ரித்வின் யாதவ் (3).

கொரோனா நோய் சரவணனை பாதிக்க, கடந்த ஆண்டு சரவணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், கீதா மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் வீட்டிலேயே இருந்து வந்தால், மனவேதனை இன்னும் அதிகரிக்கும் என்பதால், கீதா வளையப்பட்டியில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டிலேயே இருப்பதால் கணவர் நினைப்பு அதிகமாக உள்ளதாகச் சொன்னதால், பெற்றோர் அவரை கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.

suicide
suicide

இருந்தாலும், கணவரின் நினைவான இருந்த அவருக்கு பெற்றோரும், உறவினர்களும் ஆறுதல் கூறி மனத்துயரத்தைக் குறைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கொண்டப்பநாயக்கனூருக்கு மகனுடன் சென்ற கீதா, அங்குள்ள விவசாய கிணற்றில் மகனை தூக்கிவீசி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தகவல் அறிந்த சேந்தமங்கலம் காவல் நிலைய போலீஸார் மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறையினர், இருவரையும் இறந்த நிலையில் மீட்டனர்.

போலீஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம்
சேந்தமங்கலம்

ஒருவருக்குத் தன் உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொள்ளவே உரிமையில்லாத சூழலில், கீதா மூன்று வயதே ஆன தன் குழந்தையின் உயிரையும் சேர்த்து எடுத்துக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 1091