Published:Updated:

கடன் பிரச்னையில் காவிரியில் குதித்த பெண்; பரிசலில் வந்து காப்பாற்றிய மீனவர்! - திக் திக் காட்சிகள்

ராதாவைக் காப்பாற்றிய மீனவர் ( நா.ராஜமுருகன் )

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கடன் பிரச்னை காரணமாக, பெண் ஒருவர் காவிரி ஆற்றின் பாலத்திலிருந்து, குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடன் பிரச்னையில் காவிரியில் குதித்த பெண்; பரிசலில் வந்து காப்பாற்றிய மீனவர்! - திக் திக் காட்சிகள்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கடன் பிரச்னை காரணமாக, பெண் ஒருவர் காவிரி ஆற்றின் பாலத்திலிருந்து, குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Published:Updated:
ராதாவைக் காப்பாற்றிய மீனவர் ( நா.ராஜமுருகன் )

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர், விசைத்தறி கூலித் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவரும் வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, ராதா நேற்று (2-ம் தேதி) ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத்திலிருந்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையவைத்தது. அவர், தண்ணீரில் தத்தளித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாகச் சென்றவர்கள், கூச்சல் போட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் தத்தளிக்கும் ராதா
காவிரி ஆற்றில் தத்தளிக்கும் ராதா
நா.ராஜமுருகன்

அப்போது, ஆற்றின் நடுவே பரிசலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் அதைப் பார்த்து உடனடியாக, தனது பரிசலில் வந்து காவிரி ஆற்று தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், ராதாவை காப்பாற்றிவிட்டாலும், அவரால் அரை மயக்கத்தில் இருந்த ராதாவைத் தனியாளாகப் பரிசலில் ஏற்றமு டியவில்லை. செய்தவறியாது அவர் திகைத்து நிற்க, அதைப் பார்த்த பாலத்தின் மீது நின்றிருந்த இளைஞர் ஒருவர், தைரியமாக தண்ணீரில் குதித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரும் பரிசலில் ஏறி, மீனவரோடு சேர்ந்து ராதாவை பரிசலில் ஏற்றிக் காப்பாற்றி, கரைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிபாளையம் காவல் நிலைய போலீஸார், ராதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, தற்கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான், கடன் பிரச்னையால் மனஉளைச்சலில் இருந்த ராதா, காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதற்கிடையில், ராதா காவிரில் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது, தண்ணீரில் தத்தளித்தது, அதைத் தொடர்ந்து இளைஞர் ஒருவரின் உதவியோடு மீனவர் ராதாவை காப்பாற்றியது என அனைத்தையும் பாலத்தின் மீது நின்றிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

 காப்பாற்றப்பட்ட ராதா
காப்பாற்றப்பட்ட ராதா
நா.ராஜமுருகன்

அதைப் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இதற்கிடையில் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ``பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதனால், தற்கொலை முனையாக இந்தப் பகுதி காவிரி ஆறு மாறி வருவதைத் தடுக்க, காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு பேனர்கள் வைத்து காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism