Published:Updated:

ரயில் பயணத்தின்போது திடீர் உடல்நலக் குறைவு; நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி..!

நாஞ்சில் சம்பத்

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ரயில் பயணத்தின்போது திடீர் உடல்நலக் குறைவு; நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி..!

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
நாஞ்சில் சம்பத்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகேயுள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க நட்சத்திர பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் பின்னர் அ.தி.மு.க-வுக்குத் தாவினார். அதைத் தொடர்ந்து, அ.ம.மு.க-வில் இணைந்தார். சமீபகாலமாக தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் பேசிவந்தார்.

இலக்கிய மேடைகளிலும் தொடர்ந்து தென்பட்டார் நாஞ்சில் சம்பத். அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலப் பிரச்னைகள் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதுடன், மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரயிலிலேயே திருவனந்தபுரம் சென்றதாகத் தெரிகிறது.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் (Cosmopolitan) சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கின்றனர். பின்னர், நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் நாகர்கோவில் அருகேயுள்ள ஆசாரிப்பள்ளத்தில் செயல்படும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாஞ்சில் சம்பத்தை சேர்த்திருக்கின்றனர்.

நாஞ்சில் சம்பத்தின் மகனும், மருத்துவருமான சரத்பாஸ்கர் துணையுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உடல்நிலை சீராக மூன்று நாள்கள் ஆகும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.